இன்னும் ஒரு விசை, கர்த்தாவே Just Once More, Lord 63-1201E 1. [விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள் என்று, சபையோர் பாடுகிறார்கள்—ஆசி.] நாம் இப்பொழுது நம்முடைய தலைகளை வணங்குவோமாக. நம்முடைய தலைகள் வணங்கியிருப்பதோடு, நம்முடைய இருதயங்கள் தேவனுக்கு முன்பாக வணங்கியிருப்பதோடு, இந்த மகத்தான தொடர் கூட்டத்தின் முடிவிலே, நாம் இங்குக் கொண்டாடிய யூபிலி, மற்றும் வார்த்தையின் பேரில், இன்றிரவு நம்முடைய இருதயங்கள் தேவனிடத்திலிருந்து ஏதோ ஒரு காரியத்திற்காகப் பொங்கி வழிந்து கொண்டிருக்கவில்லையா என்று நான் எதிர்பார்க்கிறேன். அப்படியானால், நாம் நம்முடைய கரங்களை அவரிடம் உயர்த்தி, “கர்த்தாவே, இது என்னுடைய வேண்டுகோள். உமக்குத் தெரியும்” என்று கூறுவோமாக. 2 எங்கள் பரலோகப் பிதாவே, இப்பொழுது எங்கள் கரங்களைக் கீழே நோக்கிப் பாரும். அவர்கள் கரங்களை உயர்த்துவது, நாங்கள் எங்களுடைய எல்லாவற்றையும் உம்மிடம் சமர்ப்பிக்கிறோம் என்று பொருள்படுகிறது. பிதாவே, எங்கள் தேவை என்னவென்பதை நீர் அறிந்திருக்கிறீர், எங்கள் தேவைகளை நீர் நிரப்பும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். சில சமயங்களில் எங்களுடைய விருப்பங்கள் எங்களுடைய தேவைகளைக் காட்டிலும் அதிகமாக உள்ளன. ஆனால் பிதாவே, நீர் எங்களுடைய தேவைகளை அருளும், ஏனென்றால் நாங்கள் அதை விசுவாசத்தோடு கேட்க முடியும். நீர் அதைச் செய்வதாக வாக்குப்பண்ணினீர். நான் இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். ஆமென். (உங்களுக்கு நன்றி.) உட்காருங்கள். 3 சகோதரன் மூர், மற்றும் சகோதரி மூர், சகோதரன் பிரவுன் மற்றும் அவருடைய, சகோதரன் லைல், சகோதரன் பூட்லியருக்கு, இங்குள்ள சபையின் இந்த அருமையான ஜனங்கள், தர்மகர்த்தாக்கள், உதவிக்காரர்கள், அவர்கள் யாராயிருந்தாலும், நான் நிச்சயமாகவே இந்த வாய்ப்பிற்காகவும், நான் இங்கு வந்துள்ள அருமையான நேரத்திற்காகவும் நன்றியுள்ள வனாயிருக்கிறேன். இந்த மகத்தான ஸ்தாபகர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வந்து, தங்களுடைய பாதரட்சையின் அடிப்பாகத்தில் காகிதத்துண்டுகளோடு, இங்குள்ள இந்த வழிபாட்டு ஸ்தலத்தையும், இந்த ஜனங்களையும் இங்குக் கொண்டு வருவதற்கு தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் முயற்சி செய்துள்ளனர், ஷ்ரீவ்போர்ட் ஜேக் மூர் போன்றவர்களுக்கும், இங்குள்ள இவர்களைப் போன்றவர்களுக்கும் பெரிதும் கடன்பட்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஒரு அயராத, தன்னலமற்ற முயற்சி, அவர்கள் தேவனுடைய வெளிச்சமும், தேவனுடைய ஜீவனும் இருக்கும் ஒரு இடத்தை நிறுவ அவர்கள் முயற்சித்துள்ளனர், நாடோடி ஆண்களும் பெண்களும் ஜனங்களிடத்திற்குச் சென்று, ஆராதனைகளில் மகிழ்வார்கள். கர்த்தராகிய இயேசுவின் வருகைக்காக, அவர் அதனோடு முடிக்கும் வரை அது நீண்ட காலம் நிலைத்திருப்பதாக. 4 சபைகள், நீங்கள் ஊழியத்திற்கு, செய்திகளுக்கு அருமையான ஆதரவு தெரிவிப்பதைக் குறித்து நான் பெரிதும் மகிழ்ந்திருக்கிறேன். தேவன் நமக்காகச் செய்திருக்கிற மகத்தான காரியங்கள், அது வரம்பற்றதாயுள்ளது. நாம் மறுகரையை கடக்கும் வரையில் அது என்ன பொருட்படுத்துகிறது என்பதை நாம் ஒருபோதும் அறியமாட்டோம், ஏனென்றால் விதைக்கப்பட்ட விதையானது நமக்கு முன்னால் வரும் நாட்களில் ஜீவனைப் பெறும். அநேகர் சுகமடைந்துள்ளனர், அநேகமாக இந்த நேரத்தில் அதைக் குறித்து ஒன்றுமே தெரியாது, சிறிது காலம் கழித்து அது போய்விட்டது என்பதை நீங்கள் கண்டறிவீர்கள். நாம் அதை மிக அதிகமாகக் கண்டறிகிறோம், நீங்கள் காண்பது சம்பவிக்கிற காரியமல்ல; அதன் விளைவாக என்ன நடக்கப் போகிறது என்றும், என்ன சம்பவிக்கும் என்பதை நீங்கள் ஒருபோதும் அறியமாட்டீர்கள். இந்தக் கூட்டத்தை விட்டுச் செல்லும்போது பலவீனமானவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன், ஆனால் கிரியை முடிந்துவிட்டதையும், அது நன்றாக நடக்கும் என்பதையும் அறிந்துகொள்ள அவர்கள் போதுமான விசுவாசத்தை உடையவர்களாயிருக்கிறார்கள். 5 பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்காகவும் மற்றும் அநேக காரியங்களுக்காகவும் தங்களுடைய கரங்களைக் கிறிஸ்துவண்டை உயர்த்தினவர்கள், தேவன் உங்களோடு கிரியை செய்யும்படி நீங்கள் வாஞ்சித்த கிருபையின் கிரியைகளையும், நீங்கள் ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியினால், ஒவ்வொருவரும் நிரப்பப்படுவீர்கள் என்று நான் நம்புகிறேன். அடையாளம் என்பதன் பேரிலான என்னுடைய செய்தியை மறந்துவிடாதீர்கள். நீங்கள் அதனோடு தரித்திருக்க வேண்டும். அந்த அடையாளத்தைக் காண்பியுங்கள் என்பதை, நினைவில் கொள்ளுங்கள். 6 இப்பொழுது நாம் உடனடியாக அரிசோனா, யூமா, பீனிக்ஸ் ஆகிய இடங்களுக்குப் புறப்பட்டுச் செல்ல வேண்டும். அதன்பின்னர் நாம் இங்கே தெற்கு வழியாகத் திரும்பி வருவோம். பயணத்திட்டம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நாம் இங்கிருப்போம், அது மீண்டும் கீழ் லூசியானாவில், கிட்டத்தட்ட பிப்ரவரி மாதத்தில், இங்கே லூயிஸியானாவிலும், டல்லாஸிலும் எங்கோ உள்ளது என்று நான் நினைக்கிறேன். மேலும் உள்ளே, ஜார்ஜியாவிற்குள், அங்கே கீழே, பின்னர் புளோரிடாவிற்குள் செல்லலாம். அதன்பின்னர் நாம் அங்கிருந்து ஐரோப்பாவிற்கு ஜூன் மாதம்வரை செல்ல வேண்டியவர்களாயிருக்கிறோம். அதன்பின்னர் நாம் ஜூலை மாதம் மற்றும் ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் திரும்பி வருகிறோம். அதன்பின்னர் பூமிக்கு மிகவும் கீழே, தென் அமெரிக்காவில்… தென் அமெரிக்கா அல்ல, தென்னாப்பிரிக்கா. கர்த்தருக்கு சித்தமானால், வருகிற 1964-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதியன்று, தென்னாப்பிரிக்கா, டர்பனில் நாம் தொடங்குகிறோம், அங்கே ஒரே நேரத்தில், முப்பதாயிரம் பேர் கர்த்தரிடம் வந்ததை நாம் கண்டோம். இங்கே அமர்ந்துள்ள சகோதரன் ஜூலியஸ் ஸ்டாட்ஸ்கிலெவ், அந்த நேரத்தில் கூட்டத்தில் இருந்தார். அது சரிதான் என்று நான் நினைக்கிறேன். 7 ஒரு தீர்க்கதரிசி தென்னாப்பிரிக்காவிற்கு விஜயம் செய்கிறார் என்ற புத்தகத்தை எழுதிய சகோதரன் ஜூலியஸ் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தார் என்று நான் யூகிக்கிறேன். நான்…சகோதரி ஸ்டாட்ஸ்கிலெவ் இங்கே எங்கோ இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. என்னால்—என்னால் அவளுடைய இடத்தில்…ஆம், ஆம், இப்பொழுது எனக்குப் புரிகிறது, பிள்ளைகள். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, மின்னியாபோலிஸில், அவர்கள் சிறிய நபர்களாயிருந்தனர் என்பது எனக்கு நினைவிருக்கிறது; இப்பொழுது நான் அவர்களை மேல் நோக்கிப் பார்க்க வேண்டும், அவர்கள் ஒரு பெரிய பையனும் பெண்ணுமாய் இருக்கிறார்கள். 8 அண்மையில் சகோதரி ஸ்டாட்ஸ்கிலெவ் குறித்து, இங்கே என் இருதயம் சுழன்று கொண்டிருந்தது, ஒரு சிறு தாய், அவள் தன்னுடைய குழந்தையை இழந்துவிட்டாள். கர்த்தர்…அதை எடுத்துக்கொள்ள தகுதியுள்ளதாகக் கண்டார். அவள் என்னை அழைத்திருந்தாள், அவள் விரும்பினது…அவர்கள் என்னை விமானத்தில் ஜெர்மனிக்கு அழைத்துச் செல்லவிருந்தனர். மருத்துவர் மிகவும் அன்பாகக் காத்திருந்து, குழந்தையை அங்கேயே படுக்க வைத்தார். அந்தக் குட்டி நபர் திடீரென்று, ஒரு இனிமையான குட்டி, பருமனான பெண்ணாக மரித்துப் போனது. சகோதரி ஸ்டாட்ஸ்கிலெவ் தன்னுடைய தாயை இழந்துவிட்டார், அவள் மிகவும் நொருங்குண்டு போயிருந்தாள். இந்தக் குழந்தையினால் அவள் இன்னும் மிக மோசமாக நொறுங்குண்டு போயிருந்தாள். அவள் ஜெர்மனியிலிருந்து வெகுதொலைவில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விமானத்தில் வர விரும்பினாள். நான், “சகோதரி ஸ்டாட்ஸ்கிலெவ்…” என்றேன். 9 கடைசி நாட்களில் கர்த்தராகிய இயேசு என்னை ஊழியத்திற்கே அனுப்பியிருந்தார் என்று அவள் விசுவாசித்தாள் என்று அவளுடைய விசுவாசத்தை அவள் அறிக்கையிட்டாள், எவருமே அளிக்க முடியாத ஒரு உண்மையுள்ள சாட்சியாக இருந்தாள், அவள் தன்னுடைய முழு இருதயத்தோடு அதைப் பொருட்படுத்திக் கூறினாள். தேவனாகிய கர்த்தர், மரித்தபிறகு, மரித்தோரை எழுப்புவது போன்ற காரியங்களை அவள் கண்டிருந்தாள். ஆனால், நீங்கள் பாருங்கள், நீங்கள் உண்மையாகவே, நான்…எப்படி, ஜெர்மனியிலும் மற்ற எல்லாவற்றிலும் தேவனுக்கு என்ன ஒரு மகிமை இருந்திருக்கும்! என்னால் தானே அதைச் செய்திருக்க முடிந்திருந்தால் நான் அதைச் செய்திருப்பேன். ஆனால், முதலாவது காரியம், நாம் எதற்காகப் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் அறிந்துகொள்ளும் வரை நாம் செல்லக் கூடாது. 10 எனவே நான் வெளியே சென்று ஜெபித்தேன். அவள் இரவு முழுவதும் சில நேரம் தொலைபேசியில் பேசினாள் என்று நான் நினைக்கிறேன். அடுத்த நாள் நான் உள்ளே வந்தபோது, ஒன்றுமே இல்லை. மீண்டும் மேடா, என் மனைவி, “சகோதரி ஸ்டாட்ஸ்கிலெவ் இருமுறை தொலைபேசியில் அழைத்தாள். இன்னும் கர்த்தரிடத்திலிருந்து ஏதாவது வார்த்தை வரவில்லையா?” என்று கேட்டாள். அதற்கு நான், “ஒரு காரியமும் இல்லை” என்றேன். நான் கூறினேன்… 11 பாருங்கள், நான் வெளியே சென்று, மீண்டும் ஜெபித்தேன். அன்றிரவு நான் காட்டில் இருந்தேன். பின்னர், நிச்சயமாக, அந்தச் சிறு குழந்தையைக் குறித்த மற்ற காரியங்களைச் செய்ய வேண்டியதாயிருந்தது. அதன்பின்னர் நான் உள்ளே வந்துகொண்டிருந்தபோது, கர்த்தராகிய இயேசு எனக்கு முன்பாக நின்றுகொண்டிருந்த ஒரு தரிசனத்தில் தென்பட்டார். அப்பொழுது அவருடைய சத்தம், “அதைக் கடிந்து கொள்ளாதே. அது கர்த்தருடைய கரம்” என்று கூறினதைக் கேட்டேன். ஆகையால் தேவன் ஏதோ ஒரு காரணத்தினால் அவளுடைய குழந்தையை மகிமைக்கு கொண்டு சென்றார் என்று, நான் அதற்கு முரணாக எதையும் கூறுவது நிச்சயமாகவே கர்த்தருடைய சித்தத்திற்கு விரோதமாயிருந்தது. 12 அப்பொழுது நான், “பாருங்கள், அது ஒரு பெரிய ஏமாற்றமாக இருக்கும். ஆனால் நான் செய்த ஒரு காரியமோ, நான் கர்த்தரைக் குறித்து சிந்தையாயிருந்தேன். அவர் என்னிடத்தில் கூறினதை நான் செய்தேன்” என்று நினைத்தேன். 13 இங்கே அண்மையில், அங்குள்ள ஒரு ஊழியக்காரரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் கிடைத்தது, மேலும் அவர் இன்னும் சில ஊழியக்காரர்களின் அறிக்கைகளை அளித்திருந்தார். அவர், “அந்த ஒருவர்…” என்றார். அவர் ஒரு ஜெர்மானிய லூத்தரன் என்று, நான் நினைக்கிறேன். எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால் அவர், “சகோதரன் பிரான்ஹாமைக் குறித்து நான் பாராட்டக்கூடிய ஒரு காரியம் உண்டு. எல்லா பரபரப்பும் நடந்து கொண்டிருந்தபோது, அவர் தேவனிடத்திலிருந்து ஒரு தெளிவான தீர்மானத்தைப் பெறும் வரையிலும் அவர் நிலையாக நிலைத்திருந்தார், அப்பொழுது அவர் என்ன செய்துகொண்டிருந்தார் என்பதை அவர் அறிந்து கொண்டார்” என்றார். 14 அந்தக் காரியங்களே நீங்கள் செய்யக்கூடிய ஒரே வழி, அவர் கூறும்போது, கர்த்தரிடத்திலிருந்து முதலில் கேட்பதேயாகும். இன்றிரவு, அவர் என்னிடம் அங்குச் சென்று அந்தக் கல்லறையிலிருந்து ஜனாதிபதி கென்னடியை, எழுப்பச் சொன்னால், நான் முழு உலகத்தையும் வந்து இதைப் பார்க்க அழைப்பேன், ஏனென்றால் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நான் உடையவனாயிருப்பேன். பார்த்தீர்களா? இப்பொழுது, ஆனால் கர்த்தர் இவ்வாறு உரைத்திருக்கும் வரையில், “கர்த்தர் உரைக்கிறதாவது” என்று நான் எப்படி கூற முடியும்? பார்த்தீர்களா? பார்த்தீர்களா? 15 அநேக சமயங்களில், ஜனங்கள் உணர்ச்சிவசப்பட்டு, உணர்ச்சிவசப்படுதல்கள் மற்றும் அது போன்ற காரியங்களுக்குள்ளாகி, மனதளவில் சிந்திக்கக்கூடிய தங்களுடைய சிறந்த சிந்தனையில் செல்கிறார்கள். அது எப்பொழுதுமே உண்மையல்ல. அவர் உங்களுக்கு அதைக் கூறும் வரை காத்திருங்கள், நீங்கள் அதை அறிந்து கொள்ளுங்கள், அப்பொழுது நீங்கள் சரியாக அதைப் பெற்றிருப்பீர்கள். நீங்கள் அதைக் குறித்து யூகிக்க வேண்டியதில்லை. அது கர்த்தர் உரைக்கிறதாவது என்று அவர் உங்களிடம் கூறி முடித்துவிட்டார். அப்படியானால் அவர் உங்களிடம் கூறியிருக்கிறார், அப்பொழுது அவர் என்ன கூறினார் என்பதை நீங்கள் போய்க் கூறலாம். அதுவரைக்கும் நீங்கள் போய் உங்களால் முடிந்த ஒவ்வொரு காரியத்தையும் செய்யலாம், உங்களால் முடிந்ததை நீங்களே செய்யலாம், ஆனால் தேவன் அவ்வாறு கூறியிருக்கும் வரையில் உங்களால் நிச்சயமுடையவர்களாய் இருக்க முடியாது. அதன் பின்னரே நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள். 16 ஐயன்மீர், இது என்ன சமயம்? என்பதன் பெயரிலான ஒலிநாடாவைக் உங்களில் அநேகர் இந்த ஒலிநாடாவை வைத்திருக்கிறீர்கள், பாருங்கள். நான் ஐக்கிய குழுக்களுக்காக வேறு எங்கும் பேச முடியும், “இது கர்த்தர் உரைக்கிறதாவது என்று நான் கூறுகிறேன். நான் ஏழு தூதர்களைச் சந்திப்பேன். அது எல்லா நாடுகளிலும் அறியப்படும், பாருங்கள். ஏதோ ஒன்று சம்பவிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது, ஏனென்றால் அவர் என்னிடத்தில் கூறினார்.” இது மூன்று மாதங்களுக்குப் பிறகு இருந்தது, பாருங்கள். பார்த்தீர்களா? இந்த மற்ற காரியங்கள் யாவும், நீங்கள்…கர்த்தர் அதை உரைத்திருக்கும்போது, அது சம்பவிக்க வேண்டும். 17 அந்தக் காரணத்தினால்தான் அவருடைய வார்த்தை பரிபூரணமானது என்பதை நான் அறிந்திருக்கிறேன். ஜனங்கள் அதைக் குறித்து என்ன நினைத்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அது தேவனுடைய வார்த்தையாயுள்ளது. [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய வேதாகமத்தை தட்டுகிறார்—ஆசி.] அது உண்மை, அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாகும். பாருங்கள், அது, அது உண்மை என்பதை நாம் அறிவோம். 18 இயேசு வருகிறார். எப்பொழுது? எனக்குத் தெரியாது. அவர் எந்த ரூபத்தில், எப்படி வருவார்? எனக்கு ஒரு யோசனை உண்டு, ஆனால் எனக்குத்—எனக்குத் தெரியாது. அவர், “நான், நான் மேலே எடுத்துக் கொள்ளப்பட்டால்,” அவர் எல்லா மனிதரையும் தம்மிடம் இழுத்துக் கொள்வார் என்றும், அவர் மீண்டும் வருவார் என்றும் அவர் கூறினார் என்று இங்கே எழுதப்பட்டுள்ளது. அவர் வருகிறார் என்பதை நான் அறிவேன். ஓ, அது உறுதியானதாயுள்ளது. அது எப்பொழுது என்பது எனக்கு முக்கியமல்ல. பார்த்தீர்களா? அது இன்றிரவாயிருந்தாலும், அல்லது அது அடுத்த வருடமாயிருந்தாலும், அல்லது இப்பொழுதிலிருந்து அது ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும், அவர் அவ்வண்ணமாகவே வருகிறார்! நான் நித்திய ஜீவனைப் பெற்றுள்ளேன். எனக்கு வயதாகப் போவதில்லை, அவர் வரும்போது நான் அங்கே இருக்கப் போகிறேன். அவ்வளவுதான். அதாவது, பாருங்கள், அவர் அதை எப்பொழுது, எந்த வழியில் செய்கிறார் என்பது எனக்கு ஒரு பொருட்டல்ல, எனவே நான் அங்கே இருக்கிறேன்! 19 நான் அங்கிருப்பேன் என்று அவர் எனக்கு வாக்குப்பண்ணினார், அவர் ஏற்கனவே எனக்கு நித்திய ஜீவனை அளித்திருக்கிறார், ஏனென்றால் அவர், “என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்,” என்றார். அதுவே எனக்குப் போதுமானது. சரியாக அங்கே, அதுதான் என்னுடைய முற்றிலுமான காரியம். அதுவே என்னுடைய முற்றிலுமானதாயுள்ளது. அவர் அதை வாக்குப்பண்ணினார். அது ஒருபோதும் தவறிப் போவதற்கு வழியேக் கிடையாது. தேவனால் தவறிப்போக முடியாதது போல அதுவும் தவறிப்போக முடியாது. தேவன் தவறிப்போவது கூடாத காரியம். தேவனால் செய்ய முடியாத ஒரு காரியம், தோல்வியடைவது. அவரால் தோல்வியடை முடியாது. நீங்கள் அதற்காக மகிழ்ச்சியாயிருக்கவில்லையா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] ஓ, என்னே! 20 வருடங்கள் முடிவடைவதை நான் காணத் துவங்கி, ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று ஆராதனைகளை காணத் துவங்கினபோது, அது என்னைச் சற்று களைப்படையச் செய்யத் துவங்குகிறது, அங்கு வழக்கமாக அது என்னைத் தொல்லைப்படுத்தவில்லை. ஆனால் அப்பொழுது நான், “சரி, அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது?” என்று நினைக்கிறேன். 21 நான் உங்களை ஒரு காரியம் கேட்க விரும்புகிறேன், நாம் அந்நியர்கள் அல்ல, அதனால் நான் கேட்க விரும்புகிறேன், இன்றிரவு உங்களுக்குப் எண்பது வயதாக இருந்தால் அல்லது இன்றிரவு உங்களுக்குப் பதினைந்து வயதாக இருந்தால் என்னவாகும்? நீங்கள் எண்பது வயதுடையவராயிருந்தால், நீங்கள் நாளை இரவு இந்த நேரம்வரை உயிரோடிருந்தால், நீங்கள் அநேக, அநேக வாலிப பதினாறு வயது பிள்ளைகளைவிட அதிகமாக உயிர் வாழ்வீர்கள். அதைக் குறித்து நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா? நீங்கள் நிச்சயமாக அதைச் செய்வீர்கள். நீங்கள் தேவனை சேவிக்க ஒரு நோக்கத்திற்காக இங்கே இருக்கிறீர்கள். எனவே உங்களுக்கும் இந்த வயதிற்கும் என்ன வித்தியாசம்? தேவனுக்கு சேவை செய்யுங்கள். 22 தேவன் என்னிடத்தில் வந்து, “நீ பூமிக்கு செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறி, மேலும்—மேலும் நான் அங்கு இருந்தபோது, அவர், “பூமிக்கு போ, நான் உனக்கு நூறு வருட கால அறிவைக் கொடுக்கப் போகிறேன், ஆனால் நீ உன்னுடைய—உன்னுடைய வருடங்களைப் பங்கிட்டுக் கொள்ள விரும்புகிறேன். முதல் இருபத்தைந்து வருடங்கள், இரண்டாம் இருபத்தைந்து, மூன்றாம் இருபத்தைந்து அல்லது கடைசி இருபத்தைந்தில் இந்த வருடங்களை எடுத்துக் கொள்ள விரும்புகிறாய்?” என்று கேட்பதாக வைத்துக் கொள்வோம். 23 நான் என்ன கூறுவேன்? பாருங்கள், நான் ஒரு கால்பந்து வீரனாக அல்லது ஒரு விளையாட்டு வீரனாக இருக்க இங்கே என்னுடைய நேரத்தை ஒதுக்கப் போகிறேனானால், அல்லது ஏதாவது, நான் முதல் இருபத்தைந்தை எடுத்துக்கொள்வது நல்லது. நான் இங்கே ஒரு தச்சனாக இருக்கப் போகிறேனானால், அல்லது அதைப் போன்ற ஒரு நபராக இருக்கப் போகிறேன் என்றால், பாருங்கள், நான் இரண்டாவது இருபத்தைந்தை எடுத்துக் கொள்வது நல்லது. ஆனால் நான் கர்த்தரை சேவிக்க விரும்பினால், நான் கடைசி இருபத்தைந்து, எழுபத்தைந்து முதல் நூறு வரை எடுத்துக் கொள்வேன், ஏனென்றால் நான் அந்த அளவுக்கு அறிவை சேகரித்து வைத்துள்ளேன், நான் அதைக் குறித்து அதிகமாக அறிந்திருக்கிறேன். பார்த்தீர்களா? என்னால் என்னுடைய இரண்டு காலூன்றி நின்று சுற்றி நடக்க முடிந்த வரையில், நான் எவ்வளவு வயதாக இருக்கிறேன் என்பது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது? நான் கர்த்தரை சேவிக்கவே இங்கு வந்துள்ளேன், அவ்வளவுதான். ஆமென். அதுவே எனக்குப் போதுமானது. அவர் அதை வாக்குப்பண்ணினார். 24 இப்பொழுது உங்களுடைய தயவுக்காக, உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். கர்த்தருக்குச் சித்தமானால், நாம் மீண்டும் இந்தப் பூமியில் எங்காவது சந்திப்போம் என்று நம்புகிறோம்; இங்கே இல்லாமற்போனால், நாம் மற்றொரு பக்கத்தில் இருப்போம். கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. நான் இந்தக் கைக்குட்டைகளின் மேல் ஜெபிக்க விரும்புகிறேன். நாம் செய்திக்குச் சென்றவுடனே, சரியாக என்ன சம்பவிக்கும் என்பதை நாம் அறியோம். நாம் இரண்டு இரவுகளை உள்ளே சேர்க்க முயற்சித்தோம்…மூன்று, கிட்டத்தட்ட மூன்று இரவுகள்; ஐந்து அல்லது ஆறு, ஐந்து இரவுகளில், கர்த்தர் ஜனங்களை வெளியே அழைக்கும்படியான ஒரு அழைப்பை ஜனங்களின் மத்தியில் நமக்கு அளித்தார், அங்கே கர்த்தர் அவர்களைச் சுகப்படுத்துவார். அதன்பின்னர் நாங்கள் ஒரு இரவு, நேற்றிரவு ஜெபிக்கப்பட வேண்டும் என்று விரும்பிய ஒவ்வொரு நபருக்கு ஜெப வரிசையினூடாக அவர்களுக்காக ஜெபித்தோம். நான் எப்படி செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரிந்த ஒவ்வொரு காரியத்தையும் செய்ய முயற்சிக்க எங்கும் நான் தவறவில்லை என்று நான் நம்புகிறேன், நான்கு அல்லது ஐந்து இரவுகளுக்கு முன்னர் நாங்கள் இங்கு வந்திருந்தபோது இருந்ததைக் காட்டிலும் இன்றிரவு நாம் மேலான ஆவிக்குரிய நிலைமையிலும், சரீர நிலையிலும் நாங்கள் இருக்கிறோம். நான் தவறினால், தேவன் என்னை மன்னிப்பார், நீங்களும் என்னை மன்னியுங்கள். 25 இப்பொழுது முடிவான செய்தியில், நான்—நான் நீண்ட நேரம் பிரசங்கிக்கிற காரணத்தால், நான் அதை முடிந்தளவு துரிதப்படுத்த முயற்சிக்கப் போகிறேன். நான் என்னுடைய சபையோரிடமும் மற்ற மக்களிடமும் கூறியிருக்கிறேன், இந்த வருடத்தின் முதல் பாகத்தின் துவக்கத்தில் நான் அதைச் செய்ய முயற்சிப்பேன். நான் ஊழியத்தில் இருந்ததிலிருந்து, இந்த இரண்டு மணி நேரங்களை போன்றவற்றிலிருந்து முப்பது நிமிடங்களாகக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று, கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக இதை முயற்சித்து வருகிறேன். ஆனால், நான் மிகவும் மெதுவாக இருக்கிறேன், முப்பது நிமிடங்களில் நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்பதை என்னால் சொல்ல முடியாது, அதுதான் ஒரே காரியம். நான் ஒரு தென்பகுதிக்காரன் என்பதை நீங்கள் அறிவீர்கள், எனவே நான்—நான் அவ்வாறு செய்ய வேண்டும். என்னால் அதைக் குறித்து மிக வேகமாகச் சிந்திக்க முடியவில்லை. நான் காத்திருந்து பார்க்க வேண்டும். என்னுடைய வார்த்தைகளுக்காக, நான் அவர்பேரில் காத்திருக்க வேண்டும். எனவே, ஆனால் நான்—நான்…நான் அவர்பேரில் காத்திருக்க முடிந்த வரையில், நீங்கள் என்னோடு பொறுமையாயிருங்கள். 26 இப்பொழுது நாம் சில வேதவாக்கியங்களை வாசிப்போம், எனவே இது ஒழிந்து போகாது என்பதை நாம் அறிவோம். நாம் நம்முடைய சிறிய நட்பும் பேச்சும் கலந்த சந்திப்பிற்குப் பிறகு, நாம் இந்த உண்மையான ஆராதனையின் புனிதமான பாகத்தை, ஜீவ அப்பத்தைக் கொண்டு வருவதற்கு முன்பு, நாம் மீண்டும் ஜெபிப்போமாக. 27 கர்த்தராகிய இயேசுவே, இப்பொழுது நாங்கள் உமக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். நாங்கள் யாவரும் இந்த மகத்தான பகல் மற்றும் இரவு ஆராதனைகளுக்காக உமக்கு நன்றி தெரிவிக்கவும், வார்த்தையின் பேரிலும், ஜனங்களோடும் ஐக்கியங்கொள்ளவும் நாங்கள் அனைவரும் உம்மிடம் திரும்புகிறோம். கர்த்தாவே, நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். எங்களுடைய ஆவிகள் உயர்த்தப்பட்டிருக்கின்றன, நாங்கள் உம்மோடு உன்னதங்களில் உட்கார முடிந்ததற்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இப்பொழுதும், பிதாவே, இந்த—அந்த மகத்தான அன்பு விருந்தின் மகத்தான கடைசி இரவிலே, இன்றிரவு, நீர் எங்கள் மத்தியில் நின்று, “தாகமாயிருக்கிறவன் என்னிடத்தில் வருவானாக” என்று சத்தமிடுவீராக. கர்த்தாவே, அதை அருளும். நீர் அதைச் செய்வீர் என்று நாங்கள் அறிவோம், ஏனென்றால் நீர் அதைச் செய்வீர். அதுவே காரியங்களைச் செய்யும் உம்முடைய வழியாயுள்ளது, நீர் அதை ஒருபோதும் மாற்றுகிறதில்லை. தேவனே, நீர் எங்களுக்கு ஜீவ அப்பத்தைப் பிட்டுத் தர வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். நாங்கள் அந்த வார்த்தையை எங்களுடைய இருதயத்திற்குள்ளாகப் பெற்றுக்கொள்ளும்படியாக, அது எங்கள் எல்லோருக்கும் ஆசீர்வாதங்களின் ஊற்றைத் திறக்கும். வார்த்தையின் வாசிப்பை ஆசீர்வதியும், நான் ஜீவ அப்பத்தை பிட்க முயற்சிக்கையில், சபையாருக்கு தேவை என்னவாயிருந்தாலும் சரி எனக்கு உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 28 நாம் இஸ்ரவேலின் நியாயாதிபதிகளின் புத்தகத்திற்கு திருப்புவோம், இஸ்ரவேலின் நியாயாதிபதிகள். வார்த்தையின் ஒரு பாகத்தை வாசிக்க, நான் நியாயாதிபதிகள் 16-ம் அதிகாரத்திற்கு திருப்ப விரும்புகிறேன். நியாயாதிபதிகள், 16-ம் அதிகாரம், நான் 27-ம் மற்றும் 28-ம் வசனங்களை வாசிக்க விரும்புகிறேன். அந்த வீடு புருஷராலும் ஸ்திரீகளாலும் நிறைந்திருந்தது; அங்கே பெலிஸ்தியன்—பெலிஸ்தரின் சகல பிரபுக்களும், வீட்டின்மேல் புருஷரும் ஸ்திரீகளுமாக ஏறக்குறைய மூவாயிரம்பேர், சிம்சோன் வேடிக்கை காட்டுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்—பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிம்சோன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழிவாங்கும்படிக்கு, இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, பலப்படுத்தும் என்று சொல்லி, 29 என்னே ஒரு பரிதாபமான காட்சி! இந்தச் சிறு பொருள், நான் அதிலிருந்து ஒரு பாடப்பகுதியை எடுத்து, இவ்வாறு அழைக்கப் போகிறேன்: இன்னும் ஒரு விசை, கர்த்தாவே. இன்னும் ஒருமுறை! 30 ஒரு உஷ்ணமான நாளாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் ஒரு பெரிய கொண்டாட்டத்தை நடத்தியிருந்தனர். ஒவ்வொரு முறையும் நான் அதைக் குறித்து நினைக்கும்போது, அது என்னை வருத்தமடையச் செய்கிறது, ஏனென்றால் அந்த மதசம்பந்தமான கொண்டாட்டத்தின் தன்மை. உங்களுக்குத் தெரியும், ஒரு கொண்டாட்டம் என்பது சரிதான், ஆனால் அது கொண்டாட்டத்தின் தன்மைக்கேற்ப இருக்கும். இது ஒரு கொண்டாட்டமாயிருந்தது, அதை நான் குறிப்பிட நிச்சயமாகவே வெறுக்கிறேன். அது பெலிஸ்தியரின் தேசத்தில் நடந்தது. அவர்கள் அதைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர், “தேவனுடைய ஊழியக்காரர் மேல் பெற்ற வெற்றி” என்று கூறுவது எனக்கு வருத்தமளிக்கிறது. தேவனுடைய கீழ்ப்படியாத ஊழியக்காரன் கர்த்தருடைய நாமத்தின் மேல் ஒரு நிந்தையை வரவழைத்து, தோல்வியடைந்து கீழே விழுந்தான், இந்தப் பெலிஸ்தியர்கள் மகத்தான வெற்றியின் நேரத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர், அவர்களுடைய “மீனுக்கான தெய்வம் யெகோவாவின் ஊழியக்காரன் மேல் ஜெயம் பெற்றுள்ளது” என்று கூறினர். 31 அது ஒரு கூட்டத்தை முடிக்கும் ஒரு பொருளாக இல்லையென்றால்! ஆனால் நான் அங்கு இருந்த சுமார் ஐநூறு அல்லது அறுநூறு உரைகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, நான் வழிநடத்தப்பட்டதாக உணர்ந்தேன், என்னுடைய கண்கள் இங்கே இந்தப் பாடப்பொருளின் மேல் விழுந்தன, அப்பொழுது நான், “இன்றிரவு அதைக் குறித்து சற்று நேரம் பேசலாம் என்று நான் நினைக்கிறேன்” என்று எண்ணினேன். ஒருக்கால் பரிசுத்த ஆவியானவர் அதைக் குறித்து நாம் இங்கே அறிந்துகொள்ள விரும்புவார். சுமார்… 32 உஷ்ணமான நாளிலே, இந்த மகத்தான மீனின் தேவனைச் சுற்றிலும் அக்கினியில் பலிகள் எரிந்து கொண்டிருந்தன என்று நான் நினைக்கிறேன், அங்கே மூவாயிரம் பெலிஸ்தியர்கள் பெரிய அரங்கத்திற்குள் பிரவேசித்தபோது, அந்த இருவரையும் நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் அதை ஏற்பாடு செய்திருந்த விதம், அது ஒரு காளான் போன்று இருந்திருக்க வேண்டும். நான் சொல்லப்போனால், ஏதோ ஒரு வரிசையில்—ஒரு காளான் அல்லது ஒரு தேரைப்பூச்சி போன்ற ஒரு காரியத்தை இந்த விதமாக, இரண்டு பெரிய தூண்களோடு, அல்லது—அல்லது தூண்களோடு, அரங்கத்தை உயர்த்திப் பிடித்துக் கொண்டு, அது இந்த வடிவத்தின் மேல் அமர்ந்து, ஒருவேளை, இந்த மகத்தான அரங்கத்தில் உள்ள ஜனங்கள் கேளிக்கை நிகழ்ச்சியை நோக்கிப் பார்க்கக்கூடும் அது பிரதான தளத்தில் நடந்து கொண்டிருந்தது. 33 மிகவும் மெருகேற்றப்பட்ட போர் பிரபுக்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர், அவர்களுடைய அருமையான ஆபரணங்கள் அணிந்த பெண்மணிகள் கூட்டத்தில் இருந்தனர். முக்கிய நிகழ்வு நடக்கவிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் திடீரென முன்னோக்கி சாய்ந்தனர். நாம் சில சமயங்களில், நாம் அழைப்பது போல், ஆரம்பநிலைகள், அவர்கள்…அதன்பின்னர் அறிமுகம், முக்கிய நிகழ்ச்சிக்கான முன்னுரை. அவர்கள் சில சமயங்களில் பலி செலுத்துதல், கொலை செய்தல் போன்ற ஏராளமான பொழுதுபோக்குகளை உடையவர்களாயிருந்தனர். ஆனால் இப்பொழுது அந்த—முக்கியமான நிகழ்ச்சி நடக்கவிருந்தது, இந்த அருமையான ஒரு கூட்ட பிரபலமானவர்கள், பெலிஸ்தியர்களின் தேசத்திலுள்ள எல்லாப் பிரதேசங்களையும்…அவர்கள் எழும்பினர், ஏனென்றால் அவர்கள் ஒரு—ஒரு சிலாக்கியம் பெற்றிருந்தனர். அவர்கள் இந்தப் பெரிய இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தனர், நாம் அதை, ஒரு காளான் என்பது போல அழைப்போம். ஒரு வேளை ஏழைகள், இன்னும் மற்றவர்களும் இங்கே தரையில் இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் ஒரு நல்ல தோற்றத்தைக் காணக்கூடிய இடத்தில் அமர்ந்து, எல்லா பொழுதுபோக்கு களையும் காண்கிறார்கள். அது—அது ஒரு பிரபலங்களின் பெட்டியாயிருந்தது. அவர்களில் மூவாயிரம் பேர்! ஆகாயத்தில் மதுபானங்களால் துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தது, நாள் முழுவதும் குடித்து வெறித்துக் களியாட்டம் கொண்டிருந்தனர், குடிபோதையில் சண்டையிடுவது எப்படி இருக்கும் என்பது போல, தொடர்ந்து கொண்டே இருக்கும். அவர்கள் யாவரும் எழுந்து நின்றனர், ஏனென்றால் முக்கியமான நிகழ்ச்சி நடைபெறவிருந்ததால், அவர்கள் சாய்ந்திருந்தனர். அவர்கள் ஒரு நல்ல தோற்றத்தைப் பெற்றுக்கொள்ள விரும்பினர். அவர்களால் இதைத் தவறவிட முடியவில்லை, ஏனென்றால் இது முக்கியமான நிகழ்ச்சியாயிருந்தது. 34 அவர்கள் என்ன கண்டார்கள்? ஒரு சிறு பையன் மீனின் தேவனாகிய தாகோனின் கொண்டாட்டத்தில் ஒரு குருடான மனிதனை நடுதளத்திற்கு வழி நடத்திச் செல்கிறான். தடுமாறிக் கொண்டிருந்த பெரும் தசைகளைக் கொண்ட இந்தக் குருடனை, அந்தப் பையன் வழிநடத்தினான், குருடனாக, கம்பத்திற்குப் பக்கத்தில் நின்று, விளையாட்டுக்காக, கம்பத்தின் ஓரத்தில் அவனை நிறுத்தினான். 35 எனவே இது சிம்சோன், ஒரு—ஒரு சிறந்த தேவனுடைய ஊழியக்காரனாயிருந்த ஒரு மனிதன், இப்பொழுது அவன் அங்கே நிற்கிறான், அவமானப்படுத்தப்பட்ட, குருடான, பலவீனமான, ஒரு அவமானம். அது ஒரு—ஒரு மனச்சோர்வடைந்த, மூழ்கிப் போன தலைமுறையைக் குறித்த ஒரு படமாயுள்ளது. அது தேவனிடத்தில் அதனுடைய பிடியை இழந்துள்ள ஒரு—ஒரு தேசத்தின் ஒரு காட்சியாயுள்ளது. அது தேவனுடைய வார்த்தையின் பேரில் தன்னுடைய பிடியை இழந்துவிட்ட ஒரு சபையைக் குறித்த ஒரு காட்சியாயுள்ளது, ஏனெனில் சிம்சோன் அதைத்தான் இங்கே சுட்டிக்காட்டுகிறான். அவன் அவமானமடைந்து, நொறுங்கிப்போய், அவன் அங்கே உட்கார்ந்திருக்கையில் இல்லை சரியாகக் கூறினால் அங்கே நின்று கொண்டிருக்கையில், அவன் ஒரு பயங்கரமான நிலையில் இருந்தான். எனவே அவன் நின்று கொண்டிருந்ததை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா, இந்த மகத்தான மனிதன் ஒரு சமயம், அவனால் என்ன செய்ய முடிந்தது; இதோ அவன் இங்கே அந்த நிலையில் நின்று கொண்டு, நான் கூறினது போன்று, அவமானப்படுத்தப்பட்டு, உடைக்கப்பட்ட ஒரு அடையாளமாக இன்றிரவு நான் அறிவிக்க விரும்புகிறேன். இந்த அடையாளச் சின்னம் நாம் இப்பொழுது ஜீவித்துக் கொண்டிருக்கிற அதே நேரத்தையும், இப்பொழுதுள்ள சபையின் நிலைமையையும் சுட்டிக்காட்டுகிறது; கர்த்தருடைய வார்த்தையிலிருந்து நிலைகுலையப்பட்டு, அதனுடைய இடத்திலிருந்து அவமானப்படுத்தப்படுகின்றனர். இன்றைக்கு சுவற்றின் மேல் எழுதப்பட்டுள்ள கையெழுத்தை யாரால் படிக்க முடியும் என்ற கேள்வி வந்து கொண்டிருக்கிறது? அவர்களுக்கு அதைக் குறித்து ஒன்றுமே தெரியாது. 36 நாம் அந்தப் பெலிஸ்தியரின் சிந்தைகளை ஆராய்ந்து பார்ப்போமாக. சிம்சோன் என்ற இந்த மனிதனின் பெயர், ஒரு காலத்தில் முழு தேசத்தையும் நடுங்கச் செய்தது, சிம்சோனைக் குறித்துக் கேட்டால், ஏனென்றால் தேவன் அவனோடிருந்தார். அவனுடைய பெயரின் நிமித்தம் தேசங்கள் நடுங்கின. 37 இயேசு கிறிஸ்துவின் நாமம் முன்பு இருந்த அதே விதமாகத்தான் இருக்கிறது, ஆனால் இப்பொழுதோ அது ஒரு சாபமான வார்த்தையாக, கேலியாகப் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு இனி பயபக்தி இருப்பதாகத் தெரியவில்லை. எப்போது, அந்த நாமம் அழிவுள்ள பாஷைகளில் எப்போதும் பெயரிடப்பட்டிருக்கிற ஒவ்வொரு நாமத்திற்கும் மேலானதாயிருக்கிறது. அது வானத்தில் உள்ள ஒவ்வொரு நாமத்திற்கும், பூமியின் மேலுள்ள ஒவ்வொரு நாமத்திற்கும் மேலாக மிகவும் உயர்த்தப்பட்ட ஒரு நாமமாயிருக்கிறது, வானத்திலும் பூமியிலும் உள்ள குடும்பம் முழுவதற்குமே அது பெயரிடப்பட்டுள்ளது. அதே சமயத்தில் மனிதன் அதைச் சபிக்கும் வார்த்தைகளில் எடுத்துக்கொள்கிறான், சபை அங்கத்தினர்கள் அதைக் கேலியாகப் பயன்படுத்துகின்றனர், அநேக மதத் தலைவர்கள் அதைத் தங்களுடைய கோட்பாடுகளினால் தூஷிக்கிறார்கள். அந்தக் காரணத்தினால்தான் நாம் கம்யூனிஸம், ரோமானியக் கொள்கை, பிராடெஸ்டெண்டுகள், ஆகியவற்றின் முன் நாம் அவமானப்படுத்தப் படுகிறோம், இன்றைக்கு பூமியில் எழும்பிக்கொண்டிருக்கிற காரியங்களையும். அந்தக் காரணத்தினால்தான் நாம் அவமானப்படுத்தப்படுகிறோம். நாம் இந்தப் பதில்களை அறிந்திருக்க வேண்டும். இந்த நாளுக்கான, தேவன் அதைத் தம்முடைய புத்தகத்தில் வைத்திருக்கிறார், ஆனால் நாம் அதைக் குறித்து மறந்துவிட்ட வேறு ஏதோ காரியத்திற்கு சென்றுவிட்டோம். 38 இந்தப் பெலிஸ்தியர்களில் அநேகர், அவர்கள் அங்கே நின்றபோது, அவர்கள் மகத்தான போர்வீரர்கள் என்பதில், சந்தேகமேயில்லை…யாரோ ஒருவர், “அடுத்த சம்பவம் சிம்சோன்” என்று அறிவித்தார். அந்தப் போர்வீரர்களில் அநேகர், தங்களுடைய அருமையான ஆபரணங்கள் அணிந்து, மெருகேற்றப்பட்ட ஸ்திரீகளோடு, கைப்பிடிக் கம்பியைப் பிடித்துக் கொண்டு பார்த்தபோது, ஒரு சமயம் சிம்சோன் வேறு விதமாக நிற்பதைப் பார்த்தது நினைவுக்கு வந்தது, கர்த்தருடைய ஆவி அவன்மேல் இருந்தபோது, ஆயிரம் பெலிஸ்தியர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டிருக்க, கைகளில் கோவேறு கழுதையின் தாடை எலும்போடு நின்றான். அவர்கள் அடைக்கலம் புகும்படி எங்கோ ஒரு பாறைக்கு ஓடியிருந்தனர். 39 ஒரு மனிதன் பாலைவனத்தில் கிடந்த ஒரு கோவேறு கழுதையின் தாடை எலும்பை எடுத்தபோது, அந்த எலும்பைக் கொண்டு ஒரு பாறையின் மேல் அல்லது வேறெந்த காரியத்தின் மீதும் அடித்தால், அது அதைத் துண்டு துண்டாக நொறுக்கும் என்பதை எவரும் அறிவர். அந்தத் தலைக்கவசங்கள், அவைகளில் சில ஒரு அங்குலம் முதல் ஒன்றரை அங்குலம்வரை தடிமனாக, பித்தளையை கொண்டதாக இருந்தன. இந்த மனிதன் ஒரு போர்வீரன் அல்ல, அவன் ஈட்டிக்காகப் பயிற்சி பெற்ற ஒரு மனிதன் அல்ல. பெலிஸ்தர் உலோகத்தாலான ஒரு கவச உடையுடன், நாடாவால் கட்டப்பட்ட கவசத்துடன், அடைப்பு சட்ட ஜன்னலைப் போலச் சாய்ந்து, ஈட்டிகளையும் மற்றக் காரியங்களையும் அவைகளில் மோதவிடாமல் காக்கும் உலோகம்; தலைச்சீராகளையும், கேடகங்களையும், ஈட்டிகளையும் கொண்டிருந்தனர். அவர்கள் சிம்சோன் என்ற இந்த மனிதனை சூழ்ந்துகொண்டு, “சிறந்த இராணுவ வீரர்கள் இந்த மனிதனைக் கைப்பற்ற முடியும்” என்று எண்ணினர். 40 அவன் கையில் ஒன்றுமே இல்லை. அவன் ஒரு வறண்ட கழுதையின் தாடை எலும்பைக் கண்டான், அவன் ஆயிரம் பெலிஸ்தியர்களை முறியடிக்கும் வரைக்கும், அவன் வலப்புறமாகவும், இடப்புறமாகவும் அடிக்கத் துவங்கினான். ஏன்? வேதம், “கர்த்தருடைய ஆவி அவன்மேல் தங்கியிருந்தது” என்று கூறியுள்ளது. 41 இதோ அவன் இப்பொழுது, வித்தியாசமானவனாய் நின்றான். அவன் தன்னுடைய இரகசியத்தை வெளிப்படுத்தியிருந்தான். அவர்களால் அவனைத் தெளிவாக நினைவுகூர முடிந்தது. 42 அங்கே மற்றொரு குழு இருந்திருக்கலாம், ஒரு இரவு தெலீலாள் அவனைக் காசா பட்டிணத்திற்குள் மயக்கியிருந்ததை நினைவுகூர முடிந்தது. அவர்கள் தங்களுடைய பெரிய வாசல்களை அடைத்திருந்தனர், அநேகமாக ஒரு டன் அல்லது அதற்கும் அதிகமான எடையுள்ள, ஒரு துண்டு, நகரத்திற்குச் செல்லும் பெரிய பெரிய பித்தளை வாயில்கள், அது பாறைகளுக்குள் சென்று இறுக்கப்பட்ட இரும்புக் கம்பிகளைக் கொண்டிருந்தது, நாம் இன்றைக்கு அதைப் போன்ற அத்தகைய கீல்களை உடையவர்களாயிருக்க மாட்டோம். அவர்கள், “சிம்சோனே, பெலிஸ்தியர்கள் உன்மேல் வந்துவிட்டார்கள்” என்றனர். அவன் கயிறுகளை அறுத்துக் கொண்டு கீழே நடந்து வந்தபோது, அநேக போர்வீரர்கள் வாசலண்டை சுற்றி நின்று கொண்டு பேசாமலிருந்தனர். இரவு நேரத்தில் வெளிச்சம் எரியும்போது, கரப்பான் பூச்சிகள்போல் அவர்கள் சிதறி ஓடினர். கர்த்தருடைய ஆவி அவன் மேல் வந்து, ஒரு வாசலைத் தள்ளி, மற்றொரு வாசலைத் தள்ளி, அதைத் தன்னுடைய தோளில் போட்டுக் கொண்டு, மலையின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டான். அவர்களால் அதை நினைவுகூர முடிந்தது. “என்ன ஒரு போர்வீரன்,” அவன் மகத்தான வெற்றியில் இருப்பதைக் கண்ட அவர்களில் அநேகர் அதை நினைவுகூர முடிந்தது, “ஆனால் இப்பொழுது அவனை நோக்கிப் பாருங்கள்!” 43 அதுதான் சபையைப் பற்றிய காட்சி. சபையானது முதலில் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டதைக் குறித்து என்னால் வேதத்தில் வாசிக்க முடிகிறது, பெரிய அடையாளங்களும் அற்புதங்களும் அவர்களுடைய கூட்டங்களோடு சேர்ந்துகொண்டன. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர், நாற்பது அல்லது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, சபையானது அதே வல்லமையினால் நிரப்பப்பட்டதை நாம் நினைவுகூர முடியும். ஆனால் இன்றைக்கு அதைப் பாருங்கள், அவள் ஆடைகள் களையப்பட்ட நிலையில் நிற்கிறாள். ஏதோ ஒன்று அவளுடைய ஆடைகளைக் களைந்துவிட்டது, சிம்சோனின் ஆடைகளைக் களைந்த அதே காரியம், அவனை உள்ளே அழைத்துச் சென்ற ஒரு ஸ்திரீக்கு செவி கொடுத்ததனால் யாவும் உண்டானது. சபையை ஆடைகளைக் களையச் செய்தது, அந்த ஸ்தாபன ஸ்திரீயின் நிலைமைக்கு, அந்த வயோதிக யேசபேலுக்கு செவிகொடுத்துக் கொண்டிருக்கிறது. சிம்சோன் தோற்கடிக்க எழுப்பப்பட்டிருந்த அதே காரியம் அவனைத் தோற்கடித்துவிட்டது. இன்றிரவு பெந்தேகோஸ்தே சபையும் அதே நிலையிலேயே நிற்கிறது. அவள் தோற்கடிக்க வளர்க்கப்பட்ட அதே காரியம், ஸ்தாபனவாதம், அவள் தன்னை மீண்டும் அதற்குள் குழுவாக இணைத்துக் கொண்டாள், அவளுடைய வல்லமை போய்விட்டது. சரி. கர்த்தருடைய வல்லமை அவளை விட்டுச் சென்றது. 44 சரித்திரத்தினூடாக ஒவ்வொரு முறையும், ஒரு சபை ஸ்தாபிக்கப்பட்டதையும், தேவன் அப்பொழுதே அதை விட்டுவிட்டார் என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும். அது விழுந்து, மீண்டும் எழும்பவில்லை. பெந்தெகொஸ்தே என்பது ஸ்தாபனத்திலிருந்து வெளியே வந்த ஒன்று, ஆனால், அது என்னவாயிருந்தது, நாம் பரிசுத்த ஆவிக்குப் பதிலாக மனிதனால் உண்டாக்கப்பட்ட தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டோம். 45 சிம்சோனும் அதைத்தான் செய்தான். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், அவன் அங்கே நின்று கொண்டிருக்கையில், அந்த மனிதனுடைய சிந்தையில் என்ன நடந்திருக்க வேண்டும். தேவன் அவனுக்கு அளித்திருந்த எல்லா மகத்தான வெற்றிகளையும் அவன் நினைத்திருக்க வேண்டும், தேவன் அவனோடும், அவனுக்காகவும் செய்திருந்த மகத்தான காரியங்களையும்; எப்படியாய் அவன் தேவனோடு இருந்தபோது, அவருடைய ஆவியின் வல்லமை, அவன் தேவனோடும், தேவனோடும் மற்றும் அவருடைய ஜனங்களோடும் இருந்தபோது, அவன் சந்தோஷத்தையும், சமாதானத்தையும் பெற்றிருந்தான். எப்படியாய் சிம்சோன் அவரிடத்தில் தவறிப் போயிருந்தான்! இப்பொழுது, சிம்சோன் அழிக்கும்படி எழுப்பப்பட்ட அதே தேசமே அவனைக் கட்டியிருந்தது. 46 எதிர்க்கும்படி தேவன் எழுப்பின அதே பெந்தெகொஸ்தேயினரே அவர்களைக் கட்டியுள்ளது, ஐக்கியம் பறிக்கப்பட்டது, வல்லமை பறிக்கப்பட்டது; சண்டையிடுதல், குழப்பம், வெதுவெதுப்பான அங்கத்தினர்கள். அருமையான காரியங்கள், மகத்தானவை, எல்லாமே, ஆனால் அவர்கள்—அவர்கள் பழைய இரட்சிப்பு சேனையின் பறையை உடையவர்களாயிருந்தால், அல்லது அந்தச் சிறிய பழைய நரம்பிசைக் கருவியை மீண்டும் எங்கோ மூலையில் வாசித்தால் நலமாயிருக்கும். கோடிக்கணக்கான டாலர்கள் செலவில் நாம் பெற்றுக் கொண்டிருக்கிற நம்முடைய தேவாலயங்களை அமைப்பதைக் காட்டிலும் அவ்விதமாக அதைக் கொண்டிருப்பதையே நான் விரும்புகிறேன். 47 ஆனால் அவன் அங்கே நின்றான். அவன் தோல்வியடைந்திருந்தான். இப்பொழுது அழிக்கும்படி தேவன் அவனை எழுப்பின அதே தேசத்தில் அவன் ஒரு சிறைவாசியாக இருந்தான். 48 அவர்களை மகிழ்விக்க அவர்கள் அவனைத் வித்தைகளைச் செய்ய வைத்திருந்தனர். இன்றைக்கு அவ்வளவுதான், அவர்களை மகிழ்விக்க முயற்சிக்கும் ஒருவிதமான ஒரு சிறு வித்தை. 49 ஒரு ஸ்திரீ அவனை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேவனுடைய வார்த்தையிலிருந்து கவர்ந்திழுக்க விட்டான்! யேசபேல் என்ற ஒரு ஸ்திரீயை, “வேசிகளின் தாய்” என்று அழைக்கும் சபையும் அதையே செய்தது. வெளிப்படுத்தின விசேஷம் 17-ம் அதிகாரத்தில் சுட்டிக்காட்டப்பட்டு, அவர்கள் வெளியே வந்த வாந்திக்குள்ளாக அவர்களை மீண்டும் கவர்ந்திழுத்துள்ளனர். வேதம் கூறுவதுபோல, “நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்பது போல் ஆயிற்று.” 50 அந்தப் பன்றி ஒரு பன்றியாக இருக்கும் வரை, அது, அதனுடைய சுபாவமே ஒரு பன்றியாகவே இருக்கும், அது சேற்றிலே புரளத் திரும்பிச் செல்லும். மேலும், நீங்கள், அவனைச் சேற்றுக் குழியிலிருந்து விலக்கி வைப்பதற்கான ஒரே வழி, அவனது இயல்பை மாற்றுவதுதான். 51 அந்த ஒரே வழியில் தான் இன்றைக்கு நீங்கள் சபையில் எந்த வித்தியாசத்தையும் எப்போதும் பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள், அது ஒரு சுபாவ மாற்றத்தை உடையதாயிருக்க வேண்டும். ஏதோ ஒரு மதசம்பந்தமான முறைமை பிரசங்கிமார்களை வழி நடத்துவதற்குப் பதிலாக, பரிசுத்த ஆவியானவர், வார்த்தையின் மூலம், அவர்களை மீண்டும் அந்த தேவ பயமுள்ள ஆவியிடம் அழைத்துச் செல்வார். அது உண்மை. நாயானது முதன்முறையே, சுகவீனமாகி வாந்தி எடுக்குமானால், மீண்டும் அதற்குச் சுகவீனம் உண்டாகாதா? அப்படிப்பட்ட ஒரு குழப்பத்திலிருந்து தேவன் நம்மை வெளியே அழைத்திருப்பாரானால்…பாருங்கள், அது மீண்டும் அதே காரியத்தைச் செய்யாதா? அதன்பின்னர் நாம் அதே காரியத்திற்குள், அதற்குள் திரும்பிச் செல்கிறோம். அது ஒருபோதும் செய்யப்படக் கூடாது. 52 இந்த யேசபேல் முறைமை இப்பொழுது ஆவிக்குரிய பிரகாரமாகக் குருடாயுள்ளது, நான் தேவனுடைய வார்த்தைக்கு, சபைகளின் ஆலோசனை சங்கத்தில் தங்களை இணைத்துக் கொள்வதை பற்றி கூறிக்கொண்டிருக்கிறேன். நம்முடைய மகத்தான சுவிசேஷ போதனையான ஒவ்வொரு காரியத்தையும், நாம் ஒரு ஸ்தாபனமாயிருக்க, அதை விட்டுவிட வேண்டும். காரணம், இந்தச் சபைகளின் ஆலோசனை சங்கத்தில் இல்லாத எல்லா ஸ்தாபனங்களும், உங்களுடைய சபையானது இந்தச் சபைகளின் ஆலோசனை சங்கத்தில் இல்லாவிட்டாலும், இக்கட்டான நேரத்தில் வெடிமருந்துகளை சேமித்து வைக்க அல்லது அவர்கள் விரும்பும் எந்தக் காரியத்தையும் சேமித்து வைக்க அவர்கள் உங்களுடைய சபையை உபயோகிக்கலாம். இந்தச் சபைகளின் ஆலோசனை சங்கத்தோடு இணைந்திருக்காமல், யாராகிலும் ஜெபம் செய்வதற்காகப் பிடிபட்டால், ஒரு கூட்டாட்சி குற்றமாக, சுட்டுக் கொல்லப்படலாம். அது உண்மை. நான் வாஷிங்டனிலிருந்து அதன் பேரிலான செய்தித்தாள்களைப் பெற்றுள்ளேன். உங்களை, அவர்கள் அதற்குள் உங்களைப் பலவந்தம்பண்ணப் போகிறார்கள். அதனால்தான் நான் இந்த ஸ்தாபன முறைமைக்கு எதிராக இருந்து வருகிறேன். அதுதான். அது மிருகத்தின் முத்திரை என்பதைக் குறித்து நான் அமைதியாக இருக்க வேண்டியதாயிருந்தது, ஆனால் அது உண்மையென்று நீங்கள் அறிந்துகொள்ளும் அளவிற்கு இப்பொழுது போதிய காலதாமதமாகிவிட்டது. ஹூ-ஹூ. பார்த்தீர்களா? அது உள்ளது. அது சரியாக அதுதான். 53 இப்பொழுது அது என்ன செய்துள்ளது? அது சபையைக் கொண்டு வந்துள்ளது, அதனுடைய வல்லமையைப் பறித்து, பெயரைத் தவிர வேறொன்றுமில்லை, அது வெளிப்படுத்தின விசேஷம் 3-ம் அதிகாரத்தில், லவோதிக்கேயா சபையின் காலத்தில், கிறிஸ்துவைப் புறக்கணித்தது, மற்றும் வெளிப்புறத்தில் உள்ளதை சரியாக எடுத்துக் காட்டுகிறது. சரியாக. ஏன்? அது அதனுடைய தாய் செய்தது போலவே, ஸ்தாபனத்திற்கு திரும்பிச் சென்றது. பெந்தேகோஸ்தே, ஸ்தாபனத்திலிருந்து பிறந்தது, அதிலிருந்து பிறந்தது; அவர்கள் ஒரு கூட்ட பிள்ளைகளைப் பெற்றவுடன் அவர்கள் ஏதோ ஒரு பள்ளியிலிருந்து வந்துள்ளனர், அவர்கள், மேல் அறைகளுக்குப் பதிலாக வேதபாட கருத்தரங்குகள் மற்றுமுள்ள காரியங்களை நடத்த வேண்டியதாயிருந்தது. இப்பொழுது, அநேக பெரிய சபைகள், ஒரு மனிதன் ஒரு வெளிநாட்டு மிஷனரியாக இருக்க அனுமதிக்கப்படுவதற்கு முன்பு ஒரு மனநல மருத்துவரின் பரிசோதனையில் தேர்ச்சி பெற வேண்டும். முதல் சபையானது ஒரு மனநல மருத்துவரின் பரிசோதனையைச் சோதிக்க வேண்டியதில்லை, ஆனால் அவர்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்த பரிசோதனையினூடாகச் செல்ல வேண்டியதாயிருந்தது, அது வித்தியாசத்தை உண்டுபண்ணியது. 54 கவனியுங்கள், சிம்சோன் தன்னுடைய இரகசியத்தை தெலீலாளிடம் அளித்தான். அவள் இறுதியாக அவனை நேசித்து, அவனைத் தட்டிக் கொடுத்து, அவன் ஒரு அருமையான மனிதன் என்றும், அவள் அவனை எப்படி நேசித்தாள் என்றும், அந்த இரகசியம் எங்குள்ளது என்பதை அவள் கண்டறிந்து, அதன்பின்னர் அவள் அந்த இரகசியத்தை வெளிக்கொண்டு வந்தாள். 55 அந்த வயோதிக தாயாகிய யேசபேல் புராட்டஸ்டென்ட் சபைக்குச் சரியாக அவ்விதமாகவே செய்துள்ளாள். இப்பொழுது அவர்கள் உலகத்தின் மேல் ஐக்கியங்கொள்ளும்படியாக, அவர்கள் தங்களிடம் இருப்பதாகக் கூறப்பட்ட ஒரு சில சிறு உபதேசங்களின் பேரில் சமரசம் செய்து கொண்டிருக்கிறார்கள். சபையானது முதன் முதலாகத் தன்னுடைய ஜடைகளைத் துண்டித்தது நிசாயாவில் தான். அவள் இங்கிருந்து வந்தது முதற்கொண்டு, அவள் மீண்டும் அவைகளைக் குட்டையாக்கப் போகிறாள். அதுதான் அவளுடைய இரகசியம், வார்த்தையாயுள்ளது. “நீங்கள் என்னிலும் என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.” பாருங்கள், அங்குதான் அவர்கள் தங்களுடைய இரகசியத்தை இழக்கின்றனர். இப்போது அவர்களைப் பாருங்கள், சிம்சோனைப் போலவே தோற்கடிக்கப்பட்டனர். ஊழியக்காரர்கள், பிறப்பதற்குப் பதிலாக… 56 டேவிட் டூபிளெஸ்ஸிஸ் ஒரு சமயம் கூறினதுபோல, “தேவனுக்கு பெந்தேகோஸ்தே பேரப்பிள்ளைகள் கிடையாது”. 57 ஆனால் அந்த விதமாகத்தான் நீங்கள், “என் தாயார் பெந்தேகோஸ்தேவாக இருந்தாள். அவளுக்கு ஒரு அனுபவம் உண்டாயிருந்தது. அவள் இதைச் செய்தாள். என் தகப்பனார் இன்ன மற்றும் இன்னதைச் செய்தார்” என்கிறீர்கள். அதற்கும் உங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. நீங்களும் அதே காரியத்தைப் பெற்றிருக்க வேண்டும். 58 இப்பொழுது நம்முடைய ஊழியக்காரர்களை வெளிக்கொண்டு வரும் வேதபாட கருத்தரங்குகளை நாம் வைத்துள்ளோம். மேலும்—மேலும் எங்களுக்கு உளவியல் மாணாக்கர்கள் உள்ளனர். நீங்கள் உளவியலைக் கற்பிக்க விரும்பினால் பரவாயில்லை, ஆனால் நான் உளவியலைக் குறித்து கவலைப்படுகிறதில்லை. நான் இயேசு கிறிஸ்துவை அறிந்துகொள்ள விரும்புகிறேன், அவ்வளவுதான் நான்—நான்…நான் அறிந்து கொள்ள விரும்புவது எல்லாம் அவரைத் தான். இப்பொழுது நாம் அதைப் பெற்றுள்ளோம் என்று நாம் கண்டறிகிறோம். அது நிச்சயமாகவே இரண்டாம் தீமோத்தேயு 3-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற வேண்டும். அவர்கள் அங்கே “வெதுவெதுப்பானவர்களாயும்,” உங்களுக்குத் தெரியும், “துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், இணங்காதவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், உக்கிரமானவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும் இருப்பார்கள்.” 59 அது நமக்கு என்ன செய்துள்ளது? அது ஏறக்குறைய நம்முடைய பெந்தேகோஸ்தே ஸ்திரீகளை ஒரு ஹாலிவுட் பகட்டான நிகழ்ச்சியாக ஆக்கிவிட்டிருக்கிறது. அது உண்மை. முன்பெல்லாம் திரைப்படங்களுக்கு, படக்காட்சிகளுக்கு செல்வது தவறாகும். ஆனால் இப்பொழுது, உங்களுக்குத் தெரியும், பிசாசு அந்தவிதமாக அவர்களை மேற்கொண்டு, அவன் அதை வீட்டிலேயே வைத்துவிட்டான். பார்த்தீர்களா? அது உண்மை. முன்பு அதைச் செய்வது தவறாகும். நம்முடைய சகோதரிகள் தங்களுடைய தலைமுடியை கத்தரித்துக் கொள்வது அல்லது குட்டையான ஆடைகளை அணிவது தவறாயிருந்தது. ஆனால் இப்பொழுது அவ்வாறு இல்லை, அது அவர்களுடைய ஸ்தாபனத்தில் பெந்தேகோஸ்தே வழியின் சிந்தனை இல்லை. ஆனால் தேவனுடைய வார்த்தையின்படி அது இன்னமும் தவறாயுள்ளது! ஆனால், நீங்கள் பாருங்கள், அவர்கள் தங்களுடைய—தங்களுடைய—தங்களுடைய—தங்களுடைய வல்லமையைத் துண்டித்துவிட்டனர். ஹூ-ஹூ. பார்த்தீர்களா? அப்பொழுது அவர்கள், “பாருங்கள், எங்களுடைய சபை விசுவாசிக்கிறது…” என்கின்றனர். உங்களுடைய சபை என்ன விசுவாசித்தாலும் எனக்குக் கவலையில்லை. அது தேவன் கூறியுள்ள காரியமாயிற்றே! அந்தக் காரணத்தினால்தான் அவள் இன்றைக்கு, பதிலில்லாமல் நிற்கிறாள். 60 அந்தவிதமாகத்தான் சிம்சோனும் நின்றான். சிம்சோன் அதேக் காரியமாயிருந்தான். அவன் அங்கே நின்று கொண்டிருக்கையில், அவன் தன்னுடைய பிழைகளைக் குறித்து சிந்தித்திருக்க வேண்டும். ஒரு மனிதனால் அங்கு நின்று கொண்டு விவேகத்துடன் சிந்திக்க முடியாது என்று நான் நினைக்கிறேன், ஆனால் யாரால் சிந்திக்க முடியும், இதோ அவன் இப்பொழுது இருக்கிறான், அவன் ஒரு—ஒரு—ஒரு இடறல் கல்லானான். என்னே ஒரு நிலைமை, பெரிய பெரிய மனிதன் அங்கே நின்று கொண்டிருக்கிறான்! அவனுக்குள் இருந்த எல்லா மனிதத் தன்மையும், எனக்குத் தெரிந்த வரை தசைகள் என்று நான் அழைக்கிற, அவைகள் ஒவ்வொன்றும் அங்கிருந்தன. அவன் இன்னமும் தன்னுடைய தசைகளை உடையவனாய் இருந்தான். அவன் இன்னமும் தன்னுடைய பெரிய தசைகளை உடையவராயிருந்தான், அவனுக்கு அவனுடைய மேற்கை உள்சதை இருந்தன. அவன் பெரிய கைமுஷ்டிகளை உடையவனாயிருந்தான். அவன் எப்பொழுதும் இருந்ததைப் போன்றே அநேகமாக இன்னமும் பெரியவனாக இருந்திருக்கலாம். வெளிப்படையாகக் கூறினால், பெந்தேகோஸ்தே சபையானது எப்போதும் இருந்ததைக் காட்டிலும் மிகப் பெரியதாக உள்ளது, ஆனால் தேவன் எங்கே இருந்தார்? அதுதான். ஆம். அவன் அங்கு நின்று கொண்டிருந்தபோது, தன்னுடைய தவறுகளை நினைவு கூர்ந்தபோது, அதற்கு முதலில் காரணம் என்ன என்பதை அவன் நினைவு கூர்ந்தான். அதற்குக் காரணம் என்னவெனில், முதலாவது, அவனுடைய இயற்கையான கண்கள் சரியாக வெளியே எடுக்கப்படாததாயிருந்தது, ஆனால் அது அவனுடைய ஆவிக்குரிய பார்வையாயிருந்தபடியால், அவன் தெலீலாள் அவனை அதற்குள் கவர்ந்திழுக்க அனுமதித்தான். 61 அதுதான் இன்றைக்கு சபைக்கு தடையாயுள்ளது, தேவனுடைய வார்த்தையின் ஆவிக்குரிய உட்பார்வையானது ஒரு கூட்ட கோட்பாடுகளாக மாற்றப்பட்டுள்ளது. அதுதான் கண்…பிசாசு, அவனால் செய்யக்கூடிய முதல் காரியம், “அவர்கள் ஒரு கூட்டம் பரிசுத்த உருளைகள்” என்று கூறி, உங்களுடைய கண்களை குருடாக்கி, “இது, இது, அல்லது மற்றது, அல்லது ஏதோ ஒரு பிசாசின் அசைவு, அல்லது அது மனோத்தத்துவம், அல்லது அந்த ஒழுங்கின் பேரில் உள்ள ஏதோ ஒன்று” என்று உங்களிடம் கூறலாம். அவன் உங்களுடைய கண்களைப் பிடுங்கினால், நீங்கள் இருளில் இருக்கிறீர்கள். 62 சிம்சோன் தன்னுடைய ஜெபத்தில், “கர்த்தாவே, நான் என்னுடைய இரு கண்களையும் பழிவாங்க வேண்டும்” என்று அவன் செய்த முதல் முறையீட்டைக் கவனியுங்கள். அவனுடைய தொல்லை அங்குதான் வருகிறது என்பதை அவன் அறிந்திருந்தான். கவனியுங்கள், அவனுடைய ஜடைகள் வளர்ந்திருந்தன, ஆனால் அவன் குருடாயிருந்தான், அவன் குருடாயிருந்தபடியால், அவன் தன்னுடைய மீதி நாட்களெல்லாம் தள்ளாட வேண்டியதாயிருந்தது. 63 நாம் எப்போதும் பெற்றிருந்ததைப் போன்றே ஒரு பெரிய இயந்திரத்தை உடையவர்களாயிருக்கலாம், அநேக அங்கத்தினர்கள்; ஆனால் உங்களுக்கு முன்னால் நடந்து கொண்டிருக்கிற காரியத்திற்கு நீங்கள் குருடாயிருந்து, அதை உங்களால் காணமுடியவில்லையென்றால், அது என்ன நன்மையைச் செய்கிறது? இங்கு நாளுக்கு நாள் என்ன நடக்கிறது, மக்களுடன் சேர்ந்து, பரிசுத்த ஆவியானவர் தன்னை வெளிப்படுத்துகிறார், ஜனங்கள் அதைக் காணவில்லை. அது குருட்டுத்தனம், ஆவிக்குரிய குருட்டுத்தனம்! 64 அவர்கள் நின்று, இயேசு அற்புதங்கள் முதலியனவற்றை நிகழ்த்துவதையும், தம்மை மேசியாவாக அறிவித்ததையும் கவனித்து, அவர்களால் அதைக் காண முடியவில்லை. அதற்கு அவர், “அவர்களுக்குக் கண்கள் உண்டு, ஆனால் அவர்களால் காண முடியவில்லை” என்றார். அவர்கள் குருடாயிருந்தனர். 65 சிம்சோன் குருடாயிருந்தான். ஆனால் இங்கே தான் சிம்சோன் அடையாளம் கண்டு கொண்டான், அதாவது சபையானது இன்னும் வரவில்லை, அவன் மீண்டும் திரும்பி வருவதற்கான ஒரு சாத்தியம் இருந்தது என்பதை அவன் அறிந்திருந்தான். 66 அது சாத்தியம்தான், சபையினால் அதை மாத்திரம் அறிந்து கொள்ள முடிந்தால் நலமாயிருக்கும், ஆனால் இன்றைய ஜனங்கள் அந்தத் தரிசனத்தை இன்னும் கிரகித்துக் கொண்டதாகத் தெரியவில்லை. ஒரு சாத்தியம் உண்டு என்பதை அவர்கள் புரிந்து கொள்வதாகத் தெரியவில்லை. அது வருவதில்லை. நீங்கள் இன்னும் சற்று அதிகமாகச் சத்தமிடலாம், உங்களுடைய கரங்களைச் சற்று அதிகமாகத் தட்டலாம் அல்லது இன்னும் சற்று அதிகமாக நடனமாடலாம், அதுவல்ல அது. இல்லை. அது வார்த்தைக்குத் திரும்பியுள்ளது; அங்கே திரும்பி வந்து வார்த்தையை மீண்டும் உட்புறத்தில் பெற்றுக்கொள்ள ஒரு சாத்தியம் உண்டு. நீங்கள் அதை அங்கே புறக்கணித்துவிட்டீர்கள். கவனியுங்கள், அவர்கள் இறுக்கமாக அமர்ந்துள்ளனர். ஓ, நிச்சயமாக, அவர்களுடைய கரங்களைத் தட்டுகிறார்களா? ஆமாம் ஐயா. ஆனால், நீங்கள் பார்க்கிறீர்கள், இவை அனைத்தும் பாய்மரங்கள், எந்த நங்கூரமும் இல்லாமலே. 67 அஞ்ஞானிகள் தங்களுடைய கரங்களைத் தட்டுவதையும், நடனமாடுவதையும், அந்நிய பாஷைகளில் பேசுவதையும், அந்தக் காரியங்களையெல்லாம் செய்து, அதற்கு அர்த்தம் உரைக்கிறதையும் நான் கண்டிருக்கிறேன், ஆனால் அவர்கள் ஆப்பிரிக்க அஞ்ஞானிகளாயிருந்தனர். நிச்சயமாக. அவர்கள் ஒரு பென்சிலை கீழே கிடத்துவதையும், அந்த மந்திரவாதி அங்கே நின்று, அந்தப் பென்சிலை எழும்பி நிற்கச் செய்து, அங்கே மேலே ஒரு இடத்திற்கு மேலும் கீழுமாக ஓடி, திரும்பி வந்து, “ஒரு மொட்டையடித்தல் மற்றும் ஒரு முடியை இரண்டு துண்டுகளாகக் கத்தரித்தல்” என்பது போன்று விளையாடுவதையும் நான் கண்டேன், ஒரு தெரியாத மொழியை வரைந்து அதை எழுதினான், அவர்களில் ஒருவன் அங்கே நின்று, அதை விளக்கினான். ஓ, என்னே! 68 நீங்கள் அதன் பேரில் சார்ந்திருக்க முடியாது. அவர்களில் அநேகர் அந்நிய பாஷைகளில் பேசுகிறார்கள், அவர்கள் இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளையே மறுக்கின்றனர். நான் என்னுடைய வேதாகமத்தை எடுத்து, அதை ஒரு மனிதனிடத்தில் விளக்கியிருக்கிறேன், அவன் அங்கே நின்று கொண்டு அந்நிய பாஷைகளில் பேசுகிறான், நான், “சகோதரனே, இது சரியாக உள்ளது” என்று கூறுகிறேன். 69 “நான் அதைக் காணக்கூட விரும்பவில்லை. தேவனுக்கு மகிமை! இயேசு என்ன கூறினார் என்பதை நான் அறிவேன். மற்றவைகளைக் குறித்து நான் கவலைப்படுகிறதில்லை. அல்லேலூயா! தேவனுக்கு மகிமை” என்று அவ்வாறு கூறுகிறான். ஏன், சத்தியத்திற்கு புறமுதுகைக் காட்டும் ஒரு மனிதன் சத்தியத்தை காணாதபடிக்கு, உண்மையாகவே அப்படிப்பட்ட ஒரு பெரிய உற்சாகத்தோடு ஆடுவதும், அது மாய்மாலம், மற்றும் அதின் உச்சகட்டம், ஏனென்றால் அவன் சத்தியமாயிருந்ததை ஏற்றுக்கொண்டால், அவன் தன்னுடைய ஐக்கிய அட்டையை விட்டுவிட வேண்டியதாயிருக்கும். அது சிம்சோனைக் காட்டிலும் மோசமானது. கவனியுங்கள், ஆனால் அவர்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் இறுக்கமாக அமர்ந்துள்ளனர். 70 இப்பொழுது, ஓ, நிச்சயமாகவே, நமக்கு மகத்தான ஒன்றுகூடல்கள் உண்டு, “கூட்டங்கள்” நாம் அதை உலகப்பிரகாரமான எழுப்புதல்கள் என்று அழைக்கிறோம், இன்னும் பல, எல்லாமே வெண்கலம், நிச்சயமாக, பெரிய காரியங்கள், “இந்த நேரத்தின் செய்தியைக் கொண்ட மனிதன், இன்னார் மற்றும் இன்னார், இன்னார் மற்றும் இன்னார்” என்ற மகத்தான விளம்பரம். நாம் அவையனைத்தையும் உடையவர்களாயிருக்கிறோம், ஆனால் தேவன் எங்கே இருக்கிறார்? அதாவது, அந்தக் காரியத்தைத்தான் நாம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம், தேவன் எங்கே இருக்கிறார்? ஒரு மகத்தான பெரிய புலமை வாய்ந்த பகட்டான திறமையைக் கொண்டவர், போதிய கல்வியறிவு கொண்ட ஒருவர்…வார்த்தையை உபயோகிக்கமாட்டார் பாதி ஜனங்கள் அவர் என்ன கூறிக்கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை, அதே சமயத்தில் அவர் ஒரு கெளரவப் பட்டத்தைப் பெற்றிருந்தாலும், ஒரு பட்டம், ஒரு பட்டம், ஒரு பட்டம், அதாவது அவர் சொற்பொழிவாற்ற முடியும், வார்த்தைகளை ஒன்றாக இணைக்க முடியும், மிகவும் சரியாக நேராக நின்று, “ஆமென்” என்று கூறுவது முற்றிலும் சரியே, ஒரு இராணுவ வீரரைப் போலத் திரும்பி, மேடையை விட்டு நடந்து செல்லக்கூடும். ஆனால் தேவன் எங்கே இருக்கிறார்? 71 சிம்சோன் ஒரு சமயம் அந்த இடத்தில் நின்று, தேவனுடைய வல்லமையை அறிந்திருந்தான், ஆனால் இப்பொழுதோ அந்தச் சிலாக்கியங்களில் அவன் சிரைக்கப்பட்டிருந்தான். அவன் எப்போதும் இருந்ததைப் போலவே திடகாத்திரமாயிருந்தான், ஆனால் தேவன் அங்கே இருக்கவில்லை. 72 இன்றைக்கு நாம் அதைக் குறித்து அதிகம் பெற்றுள்ளோம். நாம் அதைப் பெற்றிருப்பது மிகவும் மோசமானது, ஆனால் நாம் அதைப் பெற்றுள்ளோம். இப்பொழுது நாம் கவனிக்கிறோம். ஆனால் அது தேவனுடைய ஆவியைத் திரும்பக் கொண்டுவருகிறதில்லை. இப்பொழுது, அதைக் குறித்த காரியம் என்னவெனில், ஜனங்கள் அதைத் திரும்பப் பெற்றுக் கொள்ள கிரயத்தை செலுத்த விருப்பமில்லை. தேவன் எப்பொழுதும் இருந்தவிதமாகவே இருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால், அதைக் குறித்த காரியம் என்னவெனில், ஜனங்கள் இவ்வளவாய் உலகத்திற்குள்ளாக ஊடுருவி, உலகம் அவர்களுக்குள்ளாக, அவர்களைத் துயரபடுவதற்கு போதிய மார்க்கத்தை அவர்கள் பெற்றுள்ளனர். தேவனண்டை உண்மையாகவே தளர்ந்து போய், உங்களுடைய முழு இருதயத்தையும் அவருக்குள் ஒப்புவித்தால் மட்டும் போதாது, ஆனால் போதுமானதோ, “ஆம், நான் சபைக்குச் செல்கிறேன். நிச்சயமாகவே, நான் நன்றாகப் பாடுவதையும், கரங்களைத் தட்டுவதையும் ரசிக்கிறேன். ஆம், நான் அதை விரும்புகிறேன், பாருங்கள்” என்கின்றனர். 73 ஆனால் நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் என்று நீங்கள் கூறுகிறதை நடைமுறைக்குக் கொண்டு வரும்போது, தவறை அறிக்கை செய்ய மனமுள்ளவர்களாயிருந்தால் நலமாயிருக்கும், அவர்கள் அதைச் செய்வதில்லை. அது அங்கே இல்லை. அவர்கள் அதைப் பெற்றிருக்கவில்லை. பாருங்கள், அதுவே உண்மையான உறுதியாய் உள்ளது. அதுதான் நமக்குத் தேவை. நாம் நீண்ட காலத்திற்கு முன்பே அதை விட்டுவிட்டு, அதை மாற்றிக்கொண்டோம். ஜெபம், மற்றும்—மற்றும் அறிக்கை செய்தல், மற்றும் நம்பிக்கை, நாம் அதை உணர்ச்சிவசப்படுதலாக மாற்றினோம், ஒரு நடுக்கம், அல்லது ஒரு இழுத்தல், அல்லது மேலும் கீழும் குதித்தல். அந்தக் காரணத்தினால்தான் அவர்களை இறுகப் பற்றிக் கொள்ளுதல் கிடையாது, ஏனென்றால் அவற்றைப் பிடித்துக் கொள்ள அங்கே எதுவும் இல்லை, நீங்கள் தேவனுடைய வார்த்தையின் அடிப்படையின் மேல் வரும்வரை, தேவனுக்கேற்ற துக்கம், மனந்திரும்பி, எதையும் சரிப்படுத்த ஆயத்தமாயிருந்து, சரியானதைச் செய்து, சரியாக ஜீவிக்க ஆயத்தமாயிருக்க வேண்டும். ஜனங்கள் என்ன கூறினாலும் அல்லது வேறு எதைக் கூறினாலும் நான் கவலைப்படுகிறதில்லை, நீங்கள் உம்முடையவர்களுக்காகவும், இயேசு கிறிஸ்துவுக்காகவும், அவர் என்ன கூறினார் என்பதற்காகவும் ஜீவிப்பீர்கள். அப்படியானால் நீங்கள் அதைப் போன்ற ஒரு சபையை எடுத்துக் கொண்டு, திரும்பி வரும்போது, அது வருவதற்கான ஒரு சாத்தியம் உண்டு. ஆனால் அவர்கள் அதைச் செய்ய விருப்பமில்லை. 74 சிம்சோன், “கர்த்தாவே, நான் இந்தப் பெலிஸ்தியரோடு மரிக்கட்டும்” என்று ஜெபித்தான். ஓ, என்னே! அதற்கு அவனுக்கு என்ன கிரயமாகப் போகிறது என்று பார்த்தீர்களா? தேவன் அவனுடைய ஜெபத்திற்கு பதிலளிப்பாரானால் என்னவாகும்? “நான் மரிக்கட்டும்.” ஓ! நான் அதை விரும்புகிறேன். 75 பேட்ரிக் ஹென்றி, “எனக்கு விடுதலை கொடுங்கள் அல்லது எனக்கு மரணத்தைக் கொடுங்கள்” என்று கூறினதைப் போலவா? அது உண்மை. 76 சரி, அதுதான் அது, விடுதலை அல்லது மரணம்! அது தேவனிடத்திற்கு அல்லது—அல்லது மரணத்தண்டை திரும்பியுள்ளது. நாம் என்ன செய்யப் போகிறோம்? நாம் எதைப் பிரதிபலிக்கிறோம்? நாம் என்ன விளையாட முயற்சித்துக் கொண்டிருக்கிறோம், கிறிஸ்துவத்தையா? பரிசுத்த ஆவியானவர் பெந்தெகொஸ்தேயில் விழுந்த பரிசுத்த ஆவியாக இன்னமும் இருப்பாரானால், அது அப்பொழுது செய்த அதேக் காரியங்களை இப்பொழுதும் செய்கிறது. அதே வல்லமை, அதே ஆவி, அது அதேவிதமாகக் கிரியை செய்யும். நமக்குச் சபைகளின் ஒரு ஆலோசனை சங்கம் தேவையில்லை. நமக்கு வேதாகமம் மீண்டும் செயல்பட வேண்டும். அது சரியாகத்தான் உள்ளது. 77 இப்பொழுது சிம்சோன், “கர்த்தாவே, நான் சத்துருவோடு மரிக்கட்டும்” என்று அவனை அந்தவிதமாகப் பிடித்திருந்த சத்துருவோடு மரிக்க வேண்டும் என்று, சரியாக ஜெபித்தான் என்பதை நாம் கண்டறிகிறோம். இன்றிரவு ஜனங்கள் ஜெபிக்க வேண்டியது ஏதாகிலும் இருக்குமானால்! செய்துள்ள இந்தக் காரியம் என்னவென்றால், வேதத்திலிருந்து விலகி ஒரு கோட்பாட்டிற்குச் செல்வதை நாம் காண்கிறோம். அப்படியானால், அந்தக் காரியத்தோடு மரித்து, அதிலிருந்து வெளியேறுங்கள்! அதற்கு மரியுங்கள். தேவனுடைய வல்லமையை மீண்டும் பெற்றுக்கொள்ள சிம்சோன் கிரயத்தை செலுத்த சித்தமாயிருந்தான். அதற்காக ஒரு கிரயம் செலுத்தப்பட வேண்டியதாயுள்ளது, ஆனால் இன்றைக்கு ஜனங்கள் அதைச் செய்வதாகத் தெரியவில்லை. 78 ஓ, நாம் நிச்சயமாகவே, எழுப்புதலைக் கேட்கிறோம். ஆம், நமக்கு ஒரு ஸ்தாபன எழுப்புதல் உண்டு, அதிகமான அங்கத்தினர்களைப் பெற்றுக்கொள்ள, அதைப் போன்ற காரியங்கள் உள்ளன. ஆனால் ஒழுக்கங்களைப் பாருங்கள், அது தொடர்ந்து சீரழிந்து கொண்டேயிருக்கிறது. அவர்கள் தேவனிடத்திலிருந்து எவ்வளவு தூர தூரமாக விலகிச் சென்று, வார்த்தையிலிருந்து எவ்வளவு தூரமாய் விலகிச் செல்கிறார்கள் என்பதைப் பாருங்கள். இப்பொழுது அவர்கள் சபைகளின் ஆலோசனை சங்கத்திற்குள்ளாகச் செல்லும்போது, ஏன், அவர்கள் சபை பெற்றுள்ள மிகப்பெரிய வார்த்தையின் கொலையாளியை ஏற்றுக்கொண்டுள்ளனர். தேவன் அவர்களுக்கு விட்டுச் சென்ற வார்த்தையை, அவர்கள் அதையெல்லாம் கடந்து சென்று விடுகின்றனர். நீங்கள் அந்த வேதாகமத்தை போதிக்க முடியாது; நீங்கள் அவர்களுடைய கோட்பாட்டைப் போதிக்க வேண்டும். இதோ அது உள்ளது. 79 சிம்சோன் ஒரு காரியத்தை அறிந்திருந்தான், சபையானது இன்றைக்கு உணர்ந்திருக்கிறதா என்று நான் யோசிக்கிறேன். அவனுடைய பின்வாங்கிப்போன நிலைமை இந்த நேரத்தின் சவாலைச் சந்திக்க முடியாது என்பதை அவன் அறிந்திருந்தான். இன்றைக்கு, பின்வாங்கிப்போன சபையின் நிலைமை இந்த மணி நேரத்தின் சவாலைச் சந்திக்க முடியாது என்பதை நான் அறிவேன். அது மோசமாகத்தான் இருக்கப்போகிறது. வேதம், “யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள்; இவர்கள் துர்ப்புத்தியுள்ள மனுஷர்கள், விசுவாசவிஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள்” என்று கூறியுள்ளது. அவர்களால் அதைச் சரியாக ஆள்மாறாட்டம் செய்ய முடியும். 80 மோசே தன்னுடைய கையில் ஒரு கோலுடன் தேவனிடத்திலிருந்து வந்த கட்டளையோடு புறப்பட்டுச் சென்றான். தேவன், “அவர்களுக்கு முன்பாக இந்த அடையாளத்தைச் செய். அவர்கள் அதற்குச் செவிகொடுக்கவில்லையென்றால், அப்பொழுது இந்த அடையாளத்தை அவர்களுக்கு முன்பாகச் செய். அவர்கள் அதற்குச் செவிகொடுக்கவில்லையென்றால், அப்பொழுது நான் உன்னோடு இருப்பேன், மற்றவைகளை நான் பார்த்துக் கொள்வேன்” என்றார். 81 பாருங்கள், மோசே தன்னுடைய முதல் அடையாளத்தோடு சென்றான். அவன் தன்னுடைய முதல் அடையாளத்தை நிகழ்த்தினவுடனே, ஆள்மாறாட்டக்காரர்கள் எல்லாவிடங்களிலும் அதையே செய்து கொண்டிருந்தனர். ஆனால் மோசே அதைக் குறித்து ஒருபோதும் சண்டையிடவில்லை. அவன் அப்படியே அசையாமல் நின்றான், ஏனென்றால் அவனை அனுப்பியது தேவனாயிருந்தது என்பதை அவன் அறிந்திருந்தான். கடைசி நாட்களில் மீண்டும் அது நடக்கப் போகிறது, என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பார்த்தீர்களா? 82 நம்முடைய பின்வாங்கிப்போன நிலை இப்பொழுது இந்த நேரத்தின் சவாலைச் சந்திக்காது, அதே சமயத்தில் எல்லா பெரிய அமைப்பும் இங்கே உள்ளது. முன்பைக் காட்டிலும் இன்றைக்கு உலகத்தில் பெந்தேகோஸ்தேயினரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பதை நாம் அறிவோம். அதிகமான பெந்தேகோஸ்தே விசுவாசிகள். அது உண்மை. 83 உங்களுக்குத் தெரியும், தி சண்டே விசிட்டர், கத்தோலிக்க செய்தித்தாள், தி சண்டே விசிட்டர் என்ற ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாள்; ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இது போன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டதாக நான் நினைக்கிறேன். அவர், “உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் சபை பெந்தேகோஸ்தேயினரே” என்றார். “கடந்த ஆண்டு கத்தோலிக்க சபையானது பத்து இலட்சம் பேர் கத்தோலிக்க மார்க்கத்தை ஏற்றுக்கொண்டதாகப் பதிவு செய்துள்ளது” என்றார். ஆனால் கூறினார்…அதெல்லாம் கத்தோலிக்க மார்க்கம். ஆனால், “பெந்தேகோஸ்தே சபை மாத்திரமே, பத்து இலட்சம், ஐந்து இலட்சம் என்று பதிவு செய்திருக்கிறது” என்றார். 84 இப்பொழுது சட்டகம் அங்குள்ளது, ஆனால் நாம் ஒரு சிலராயிருந்தபோது இருந்த வல்லமையை நாம் பெற்றிருக்கவில்லை. சிம்சோனுடைய பெரிய உருவம் அங்கே நின்றது. ஆனால் கர்த்தருடைய வல்லமை எங்கேயிருந்தது? ஆம், ஸ்தாபன முறைமை கர்த்தருடைய வார்த்தையை ரூபகாரப்படுத்துகிறதில்லை. அது உண்மை. இப்பொழுது கவனியுங்கள். 85 நான் என் வீதியில் வசிக்கும் ஒரு பாதிரியாரிடம், அதாவது சேக்ரட் ஹார்ட் சபையைச் சேர்ந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். 86 ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பு, இந்தப் புதிய விவகாரம் வந்துள்ளது முதற்கொண்டு, லூத்தரன் பிரசங்கியார் கத்தோலிக்க சபையின் குருவானவரை, சேக்ரட் ஹார்ட் சபை, அவருக்காக அவருடைய பிரசங்க பீடத்தில் பிரசங்கிக்க முன்வந்தார். கத்தோலிக்க பாதிரியார் லூத்தரன் ஊழியக்காரரை அவருக்குப் பதிலாகப் பூசை செய்ய வைத்தார். “பிரசங்க பீடத்தை மாற்றிக்கொண்டது” என்று ஒரு பெரிய துண்டு செய்தித்தாளில் வந்துள்ளது. ஆம். நிச்சயமாக. ஓ, என்னே, எவரேனும் அதைக் காணக்கூடுமானால்…உங்களால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை யென்றால், பாருங்கள், நீங்கள்—நீங்கள்—நீங்கள் நிச்சயமாகவே வேதப்பிரகாரமாகக் குருடாயிருக்கிறீர்கள். பார்த்தீர்களா? ஆம். 87 நான் இந்தக் குருவானவரிடம் பேசினேன். அவர் என்னிடத்தில் கூறினார், அவர், “திரு.பிரான்ஹாம், நான் உம்மிடம் பேச விரும்புகிறேன்” என்றார். நான், “சரி” என்றேன். 88 மேலும் அவர், “நீங்கள் இந்தப் பிரேசியர் பெண்ணுக்கு, மேரி எலிசபெத் பிரேசியர் என்ற பெயருள்ளவளுக்கு ஞானஸ்நானம் கொடுத்தீர்களா?” என்று கேட்டார். அதற்கு நான், “ஆம், ஐயா, நான் கொடுத்தேன்” என்றேன். அதற்கு அவர், “அதைக் குறித்த உங்களுடைய கையொப்பமிடப்பட்ட அறிக்கையைப் பேராயர் விரும்புகிறார்” என்றார். நான், “அவள் கத்தோலிக்க மதத்திற்கு மாறினாள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்” என்றேன். 89 அவர், “ஆம்” என்று கூறி, “அவள் தாய் சபைக்குத் திரும்பி வந்தாள்” என்றார். 90 அதற்கு நான், “ஆம், ஐயா,” நான், “அவளுடைய தாயார் அதைக் குறித்து என்னிடம் கூறிக்கொண்டிருந்தார்” என்றேன். மேலும், “ஆம், அவளுடைய தாயார் அதை அவ்வளவு சரியாக எடுத்துக் கொள்ளவில்லை” என்றாள். 91 அதற்கு நான், “ஆம், அவளுடைய தாயார் என்னிடத்தில், அவள் அவளோடு கல்லறைக்கு நடந்து செல்வதையே மேலானதாகக் கூறினாள்” என்றேன். நான், “வெளிப்படையாகக் கூறினால், அவள் அதைத்தான் செய்து கொண்டிருந்தாள்” என்றேன். 92 எனவே அவர் கூறினார், அவர், “நீங்கள் இந்த அறிக்கையில் கையெழுத்திட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றார். “நீர் அவளுக்கு ஞானஸ்நானம் கொடுத்தீரா? நீர் எப்படி அவளுக்கு ஞானஸ்நானம் கொடுத்தீர்?” என்று கேட்டார். நான், “கிறிஸ்தவ ஞானஸ்நானத்தில்” என்றேன். 93 அவர், “ஐயா, நான் எப்படி என்று பொருட்படுத்திக் கேட்கிறேன்? நீர் அவள்மேல் தெளித்தீரா, ஊற்றினீரா அல்லது தண்ணீரில் மூழ்கிவிட்டீரா?” என்று கேட்கிறேன். நான், “கிறிஸ்தவ ஞானஸ்நானம் தண்ணீரில் முழுக்குவதாக இருக்கிறது” என்றேன். 94 “ஹூ-ஹூ,” “சரி” என்றார். “இப்பொழுது, நீர், அப்படியானால் நீர் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் அவளைத் தண்ணீரில் முழுக்குனீரா?” என்று கேட்டார். 95 நான், “ஆம், ஐயா, அது இயேசு கிறிஸ்து, அது பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமம். அந்தவிதமாகத்தான் நான்—நான் அவளுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன்” என்றேன். 96 மேலும் அவர், “நீங்கள் அவளுக்குப் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தீர்களா?” என்று கேட்டார். 97 நான், “ஆம், ஐயா. இப்பொழுது, நான் அவைகளை ஒருபோதும் வார்த்தைகளால் அழைத்ததில்லை. நான் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் அவளுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன், அது ‘இயேசு கிறிஸ்து’” என்றேன். 98 அதற்கு அவர், “ஆம், ஐயா, நான் புரிந்துகொள்கிறேன்” என்று கூறி, அவர் அதை அந்த விதமாகக் குறித்துக்கொண்டார். அவர், “ஆதி கத்தோலிக்க சபை அந்தவிதமாகத்தான் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்” என்றார். நான், “ஓ, அது சரியா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “ஆம், அதுதான் வழி” என்றார். நான், “என்ன நடந்தது? ‘அவர்கள் நன்றாக ஓடினர்’” என்று கூறினேன். 99 அதற்கு அவர், “பாருங்கள்” என்று கூறி, அவர், “நீங்கள் பாருங்கள்,” என்றார்—என்று கூறி, “நீங்கள் ஒரு வேதாகமத்தை விசுவாசிக்கிறீர்கள். தேவன் தம்முடைய சபையில் இருக்கிறார்” என்றார். 100 நான், “ஐயா, தேவன் தம்முடைய வார்த்தையில் இருக்கிறார்” என்றேன். நான், “பேதுரு முதல் போப் என்று நீர் கூறினீரா?” என்று கேட்டேன். அவரோ, “அவர் தான்” என்றார். 101 “பாருங்கள்,” நான், “கத்தோலிக்க சபையானது அதனுடைய எல்லா பூசைகளையும் லத்தீன் மொழியிலும், மற்ற மொழிகளிலும் கூற வேண்டுமானால், அங்கே அது மாறாது; அப்பொழுது அப்போஸ்தலர் 2:38-ல் முதலாம் போப் என்ன கூறினார், அங்கே அவர், ‘நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று கூறினாரல்லவா?” அவர், “நீ…” என்றார். நான், “இந்த அறிக்கையின் பேரில், மற்றும் பலவற்றில்” என்றேன். நான் கூறினேன். 102 அவர், “சரி, இயேசு தம்முடைய சீஷர்களிடத்தில், ‘நீங்கள் எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ, அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும் என்றும்; எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ, அவர்களுக்கு அவைகள் மன்னிக்கப்படாதிருக்கும்’ என்று சொல்லவில்லையா?” என்று கேட்டார். நான், “அவர் அதைச் செய்தார்” என்றேன். 103 “அப்படியானால் அதில் என்ன தவறு? உங்களுடைய வேதமே அதை உங்களுக்குக் கூறுகிறது” என்றார். 104 அப்பொழுது நான், “அப்படியானால் அவர்கள் பாவங்களை மன்னித்தவிதமாகவே நீங்கள் பாவங்களை மன்னித்தால், நான் உங்களோடு செல்வேன். காரணம், திறவுகோல்களை உடையவனாயிருந்த பேதுருவிடம், ‘இரட்சிக்கப்பட நாங்கள் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்கப்பட்டது. அவன், ‘நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்றான். இப்பொழுது அந்தவிதமாக நீங்கள் அதைச் செய்யுங்கள், நான் உங்களோடு வருவேன்” என்றேன். ஆமென். அதுதான் வார்த்தை. அதைச் செய்வது தேவனுடைய வழியாகும். அவர்கள் அதன் பேரில் பலவீனமடைந்தனர். அது… அதற்கு அவர், “நல்லது, பாருங்கள், நான் ஒருபோதும் உங்களோடு வாதிட வரவில்லை” என்றார். 105 நான், “யார் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தது?” என்று கேட்டேன். பார்த்தீர்களா? நான், “நான் ஒருபோதும் வாதிடவில்லை. நான் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கவில்லை. நான்…நீங்கள் என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டீர்கள், நான் அறிந்துள்ளபடியே நான் அதற்கு மிகச் சிறந்த முறையில் பதிலளித்தேன்” என்று கூறினேன். 106 அப்பொழுது நான், “நான் உங்களிடம் ஒன்றைக் கேட்கப் போகிறேன்” என்றேன். நான், “தேவன் சபையோடு இருந்தார் என்று…நீர் கூறினீர். இப்பொழுது முதல் கிறிஸ்தவர்களாகிய உங்களுக்கு, நான் உங்களுக்குச் சொல்வதன் பலனைத் தரப் போகிறேன், நீங்கள் அவர்களைக் கத்தோலிக்கர்கள் என்று அழைக்க விரும்பினால், சரி; பேதுரு, யாக்கோபு, யோவான், மாற்கு, லூக்கா, இன்னும் எல்லோருமே, அவர்கள், ஆம்.” நான், “அப்பொழுது இந்த அப்போஸ்தலர்கள் எழுதின வேதாகமத்தின் ஒழுங்கைப் பின்பற்றுவதில், இப்பொழுது உங்களுடைய மறைமாவட்டங்கள் அப்பொழுது இருந்ததைக் காட்டிலும் மிகப் பெரியதாய் இருக்கின்றன என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள், நீங்கள் அதிக ஞானத்தை அறிந்திருக்கிறீர்களா? மேலும்…உங்களுக்குத் தெரியுமா…?” என்று கேட்டேன். “ஆம், ஐயா. அது முற்றிலும் உண்மை” என்றார். 107 நான், “அப்படியானால் ஏன், அவர்கள் இயேசு கிறிஸ்துவின் கற்பனைகளைப் பின்பற்றினபோது, அவர்கள் மரித்தோரை எழுப்பி, அவர்கள் பிசாசுகளைத் துரத்தி, அவர்கள் எல்லாவிதமான அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்தனர், நீங்கள் அதை இன்றைக்கு செய்யவில்லையா? இப்பொழுது என்ன தவறு?” என்று கேட்டனர். 108 சபையானது லூத்தரன் காலத்திலோ அல்லது வெஸ்லியின் காலத்திலோ அல்லது வேறு எந்தக் காலத்திலோ சிறப்பாக இருந்திருந்தால், அவர்கள் முன்பிருந்தைப் போல, அப்பொழுது அவர்கள் ஏன் அவர்களுடைய கிரியைகளைச் செய்யவில்லை? பார்த்தீர்களா? புரிகிறதா? நிச்சயமாக. வார்த்தைக்குத் திரும்புங்கள்! 109 சிம்சோன் தன்னுடைய வல்லமையை பறிகொடுத்து அங்கே நின்றான். ஆனால், உங்களுக்குத் தெரியும், ஏதோ ஒன்று இருந்தது (நான் துரிதமாகக் கூற விரும்புகிறேன்) சிம்சோன் அங்கே நின்றுகொண்டு இவையெல்லாவற்றையும் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, பெலிஸ்தியர்கள் கவனிக்கவில்லை. 110 நான் பெந்தேகோஸ்தே உலகத்தைக் கொண்டு சென்று, அவர்களை எங்காவது ஒரு மூலையில் வைத்திருக்க முடிந்தால் நன்றாக இருக்கும் என்று நான் விரும்புகிறேன், அவர்கள் கொஞ்ச நேரம் அப்படி யோசிக்கட்டும், இந்த நியாயமான காரியங்களைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். ஸ்தாபனத்தின் மிகப் பெரிய அளவில் இப்பொழுது நாம் எங்கே இருக்கிறோம்? ஒவ்வொருவரும் மற்றவருக்கு எதிராக. இருமைக்கு எதிரான ஒருமைப்பாடு, மூவாண்மைக்கு எதிரான இருமைத்துவம், இன்னும் மற்றவை, அந்த விதமாகத்தான் அது உள்ளது. அது அந்தவிதமாக இருக்கக் கூடாது, அந்தவிதமாக இருக்கக் கூடாது. நாம் திரும்பி வந்து, ஒன்று கூடி, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதன் அடிப்படையின் பேரில் இதற்குத் தீர்வு காண வேண்டும். 111 சபையில் உள்ள தீர்க்கதரிசிகளோடுள்ள காரியம் என்ன? கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசிகளுக்கு வர வேண்டும். தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று உரிமை கோரும் ஒரு தீர்க்கதரிசி, வேதத்திலுள்ள இந்தச் சத்தியத்தை மறுதலிப்பாரானால், வார்த்தையின்படி, அவன் ஒரு தீர்க்கதரிசியல்ல. இப்பொழுது, நம்மை ஒழுங்குபடுத்தவும், நம்மை ஒழுங்காக வைத்திருக்கவும் இந்த வரங்களை நாம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அங்கே, எப்படியோ அல்லது மற்றெல்லாவற்றிலிருந்தும் நாம் விலகிவிட்டோம். அவர்கள் ஒரு மூலையில் தள்ளப்பட்டிருக்கின்றனர். 112 இதோ சிம்சோன் நின்று கொண்டு, எல்லாவற்றையும் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தான். இந்தப் பெலிஸ்தியர்கள் அங்கே நின்று கொண்டு, தங்களுடைய கரங்களை இந்த ஸ்திரீகளை சுற்றிப் போட்டுக் கொண்டு, கீழே நோக்கிப் பார்த்து ஏப்பம் விட்டுக் கொண்டு, குடிபோதையில், யேகோவாவின் ஊழியக்காரன் மேல் பெற்ற வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். ஓ, என்னே, அதைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும்படியாக, உங்களுக்குள்ளாக ஏதோ ஒரு காரியம் நடக்கிறதா, அது யேகோவாவின் திட்டத்தின் மேல் வெற்றி! ஆம், அங்கே ஒரு மீன் தெய்வத்தோடு நின்று கொண்டிருந்தனர். தாகோன் மீன் தெய்வமாக இருந்தது. அவர்கள் பலியை எரித்துக் கொண்டிருந்தனர். மானிட உயிர்கள் எடுக்கப்பட்டன, ஒரு சிறு பிள்ளை பலியாக மரிக்க வேண்டியதாயிருந்தது, பலி செலுத்துவதற்காக அதனுடைய இருதயத்தை, ஒரு பட்டயம் அதனூடாக ஊடுருவிச் செல்ல வேண்டும். அங்கே அவர்கள் யேகோவாவின் மேல் பெற்ற வெற்றியின் பேரில் இந்தப் பெரிய கொண்டாட்டத்தை நடத்திக் கொண்டிருந்தனர். 113 இன்றிரவு சபையானது, ஒரு கூட்ட பெலிஸ்தியர்களைப் போல, சபைகளின் ஆலோசனை சங்கம் என்ற கருத்தைப் பற்றிப் பெருமை பேசுகிறது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, அதைச் சேர்ந்திராத ஒவ்வொரு சபையையும் மூடிவிடும். சிம்சோனே, உன்னுடைய தலைமுடியை குட்டையாக வெட்டிக் கொள்ளாதே! அந்த வார்த்தையோடு சரியாக நிலைத்திரு. என்ன நடந்தாலும் எனக்குக் கவலையில்லை, நீங்கள் அந்த வார்த்தையோடு சரியாக அங்கேயே நிலைத்திருங்கள். அதற்குள்ளாகக் குழப்பிக்கொள்ள வேண்டாம். 114 சிம்சோன் யோசிக்கத் துவங்கி “ஒரு வாய்ப்பு இருக்கிறதா என்று யோசித்தானா?” இப்பொழுது அவன், “என் தலைமுடி வளர்ந்து விட்டதை நான் அறிவேன், ஆனால் நான் குருடாயிருக்கிறேன். மற்றொரு எழுப்புதலுக்கான ஒரு சாத்தியம் இருக்கக்கூடும். ஒரு சாத்தியம் உண்டு” என்றான். 115 அவன் அந்தச் சிறு பையனிடம், “என் கைகளைக் கம்பத்தின் மேல் வை. முழு கட்டிடமும் கட்டப்பட்டுள்ள கம்பங்கள் இவையா?” என்று கேட்டான். “ஆம்.” “எல்லா ராஜாக்களையும், பிரபலமானவர்களையும் மேலே என்று நீ கூறுகிறாயா?” “ஆம்.” 116 “நான் களைப்புற்றிருக்கிறேன். நீங்கள் என்னை அநேக வித்தைகளையும் மற்ற காரியங்களையும் செய்ய வைத்திருக்கிறீர்களே! என் கைகளைக் கம்பத்தின் மேல் வைப்பீர்களா?” என்று கேட்டான். 117 அவன் தன்னுடைய கரங்களைக் கம்பத்தின் மேல் வைத்து, அவற்றுக்கு இடையில் நின்றான், ஒருக்கால் இந்த வரிசையில் இருப்பது போன்று இருக்கலாம். அவன் அங்கே தன்னுடைய கரங்களைத் தூண்களுக்கு எதிரே வைத்து நின்றான். பெலிஸ்தியர்கள், அப்படிப்பட்ட ஒரு மகத்தான நேரத்தைக் கொண்டாடினர், அவர்கள் அவனைக் கவனிக்க மறந்துவிட்டனர். ஓ, என்னே! 118 ஆனால் அவன், “தேவன் இன்னமும் தேவனாகவே இருக்கிறார். அவர் இருக்கிறார் என்பதை நான் அறிவேன், நான் அவரைச் சோதித்திருக்கிறேன், நான் அவரைச் சோதனைக்குட்படுத்தியிருக்கிறேன். அவர் இன்னமும் தேவனாக இருக்கிறார் என்பதை நான் அறிவேன். நான்தான் தவறாயிருக்கிறேன். நான்தான் பாவம் செய்தேன்” என்று யோசிக்கத் தொடங்கினான். குருடாக்கப்பட்ட விழிப்பள்ளங்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடுவதையும், அவனுடைய தாடையிலிருந்து வழிந்தோடுவதையும் அவர்கள் கவனிக்கவில்லை. அவனுடைய உதடுகளின் அசைவை அவர்கள் கவனிக்கவில்லை. “கர்த்தாவே, நான் தவறு செய்துவிட்டேன். நான் பெலிஸ்தியரோடு மரிக்கட்டும்” என்றான். 119 அவன் தன்னுடைய சொந்த ஜீவனைக் காட்டிலும் யேசபேலுக்கு முன்பாகத் தேவனுடைய வார்த்தை வெளிப்பட வேண்டும் என்று விரும்பினான். ஓ, அந்த வாஞ்சை மீண்டும் சபைக்கு வரக்கூடுமானால் நலமாயிருக்குமே! ஆம். அவன் ஒரு புதிய ஒழுங்குக்காக, புதிய ஸ்தாபனத்திற்காக ஜெபித்துக் கொண்டிருக்கவில்லை, ஆனால் தேவனுடைய வார்த்தை மீண்டும் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே; அவன் ஒரு முறை பெற்றிருந்த வாக்குத்தத்தம் மீண்டும் அவனிடத்திற்கு திரும்ப வரும். அவனுடைய ஜெபத்திற்கு பதிலளிக்கப்பட்டால் என்ன சம்பவிக்கும் என்பதை அவன் அறிந்திருந்தான், ஆனால் அவன் ஆயத்தமாயும், ஆர்வமுள்ளவனுமாயிருந்தான். ஓ, சபையானது மாத்திரம் அதைப் போன்ற நிலையை அடைந்தால் நலமாயிருக்குமே! அப்பொழுது அவன் சத்தமிட்டான்! 120 அவன் மெதுவாக, “கர்த்தாவே, அது கூடும். அது சாத்தியமே. நான் இங்கே நிற்கிறேன், என்னுடைய பெரிய சட்டகம் முழுவதும் இன்னமும் ஒன்றாகவே உள்ளது. நான் இங்கே இருக்கிறேன், என்னுடைய தலைமுடி வளர்ந்துள்ளது. ஆனால் அவர்களை எப்படி அடிப்பது என்பதை என்னால் காண முடியவில்லை, ஏனென்றால் என்னுடைய கண்கள் குருடாயிருக்கின்றன. நான் எங்கே போய்க் கொண்டிருந்தேன் என்பதை என்னால் காணமுடியவில்லை. ஆனால் கர்த்தாவே, உம்முடைய வல்லமையைக் காண்பிக்கும்படி நீர் அதை—அதை மீண்டும் சம்பவிக்க அனுமதித்திருக்கக்கூடும்” என்று ஜெபித்துக் கொண்டிருந்தான். அவன், “இன்னும் ஒரு விசை, கர்த்தாவே, இன்னும் ஒரு விசை!” என்று சத்தமிட்டான். 121 ஓ, சபையினால் மாத்திரம், “இன்னும் ஒரு விசை, கர்த்தாவே, உம்முடைய வல்லமையை நாங்கள் காணட்டும்!” என்று கூக்குரலிட முடிந்தால் நலமாயிருக்கும். 122 “இன்னும் ஒரு விசை!” அவன் அழுது தேவனிடத்தில் கேட்டபோது, அந்தத் தசைகள் வீங்கத் துவங்கினதை என்னால் காண முடிகிறது. அவனுடைய சரீரத்தில் உள்ள ஒவ்வொரு நார்ச்சத்தும் சுழலத் துவங்குகிறது. அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அவன்மேல் வந்துகொண்டிருந்தார். பரிசுத்த ஆவியின் வல்லமை அவன்மேல் இருந்தபடியால், அவன் தன்னுடைய கரங்களை மீண்டும் நீட்டினபோது, கட்டிடம் கீழே விழுந்தது. வேதம், “அவன் தன் நாட்களில் கொன்றதைக் காட்டிலும் அந்நாளில் அதிகமாகக் கொன்றான்” என்று கூறியுள்ளது. அப்பொழுது தேவன் அவனுக்கு அளித்த கட்டளையை அவன் நிறைவேற்றினான். “இன்னும் ஒரு விசை!” 123 அது எப்பொழுதுமே அவ்விதமாகவே இருந்து வந்துள்ளது. தேவனுடைய வல்லமை வரும்போது, பெரிய அமைப்பு முறைமைகள் வீழ்ச்சியுறுகின்றன. அவனுடைய கடைசி காலத்தில் சிம்சோன் தன்னுடைய சத்துருவின் மேல் பெற்ற மகத்தான வெற்றியாகும். 124 இப்பொழுது முடிவாக நான் இதைக் கூறட்டும். பெந்தேகோஸ்தே, நாம் இந்தப் பெரிய ஸ்தாபனங்களில் நாம் ஹாலிவுட்டின் பதவியில் நிற்க முடியுமா என்றும், தேவனுடைய அன்பிலிருந்து நம்மை வேறுபிரிக்கிற இந்த மற்ற காரியங்கள் குறித்தும் நம்மால் இருக்க முடியுமா அது கிறிஸ்துவுக்குள் உள்ளது, நாம் அங்கே நின்று, மனந்திரும்பி, “கர்த்தாவே, இன்னும் ஒரு விசை எங்களைப் பெந்தெகொஸ்தேயாக்கும்! கர்த்தாவே, இன்னும் ஒரு விசை எங்களைப் பெந்தெகொஸ்தேயாக ஆக்கும்! கர்த்தாவே, இன்னும் ஒரு விசை உம்முடைய வல்லமையை எங்களுக்குள் காண்பியும்! இன்னும் ஒரு முறை செய்வீரா”? 125 கவனியுங்கள், உங்களுடைய சத்துரு உங்களை அழிப்பதற்கு முன்பு, உங்களுடைய சத்துருவை அழித்துப் போடுங்கள். அவர் அதைச் செய்வார். பண்டைய நாகரீகக் கூட்டங்களையும் மற்ற காரியங்களையும் திரும்பக் கொண்டு வாருங்கள். மேலும், ஓ, தெலீலாளை தனியே விட்டுவிடுங்கள், உலகத்தைத் தனியே விட்டுவிடுங்கள், நீங்கள் செய்யக்கூடாத சிறிய காரியங்களுக்குள்ளாக உங்களைக் கவர்ந்திழுக்கும் அந்தக் காரியம். சபையில் சிறு காரியங்கள், தொல்லைகள் உண்டாகின்றன, நீங்கள் திருத்துதலை சகிக்கமாட்டீர்கள், ஏனென்றால் நீங்கள் அதைப் பொறுத்துக் கொள்கிறதில்லை; நீங்கள் வேறொரு சபைக்குச் சென்று விடலாம், அது போன்ற காரியங்கள். ஆதி நாட்களில், ஒரு மனிதன் தேவனுடைய வார்த்தையோடு ஒத்துப் போகாதபோது, அவர்கள் அவனை மரித்துப்போனவனாக வெளியே கொண்டு சென்றனர். 126 “பெந்தெகொஸ்தேக்கு எங்களைத் திரும்பக் கொண்டு வாரும்!” நவநாகரீக ஹாலிவுட் பகட்டாரவாரம் அல்ல, ஆனால் முழு இருதயத்தோடு தேவனண்டை திருப்புவதே நமக்குத் தேவையாயிருக்கிறது. “இன்னும் ஒரு விசை, ஓ, கர்த்தாவே, இன்னும் ஒரு விசை!” 127 அது சம்பவிக்கிறதை என்னால் காண முடிந்தால் நலமாயிருக்கும், என் பழைய பலவீனமான கண்கள் மீண்டும் நோக்கிப் பார்க்க முடிந்தால் நலமாயிருக்கும் சபையானது அதனுடைய வேறுபாடுகளை மறந்துவிட்டதைக் காண முடிந்தால்! அந்த ஸ்தாபன முறைமை உடைந்து போவதை என்னால் காண முடிந்தால், ஆலோசனை சங்கத்தின் மடியில் அதை எறிந்துவிட்டு, “நாங்கள் இதனோடு எந்த தொடர்பும் கொள்ளக் கூடாது! நாங்கள் எங்களுடைய பிறப்புரிமையை பறிகொடுக்கமாட்டோம்!” என்று கூறுவார்களாக. திரித்துவத்தையும், ஒருத்துவத்தையும், அவர்கள் யாவரும் ஒன்று சேர்ந்து, என்னால் பார்க்க முடிந்தால், “சகோதரர்களே, நாம் அவரை விட்டுவிட்ட இடத்திற்கு நாம் திரும்பிச் செல்வோம். தண்ணீர் ஞானஸ்நானம் என்ற பொருளின் பேரில் நாம் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளத் துவங்கின இடத்திற்கு நாம் திரும்பிச் செல்வோம், திரும்பி வந்து அதற்கான வேதாகம வழியை எடுத்துக் கொள்வோம்” என்று கூறிவிட்டு, அதன் பின்னர், “இன்னும் ஒரு விசை, கர்த்தாவே, இன்னும் ஒரு விசை!” என்று கதறுவோமாக. இந்த எல்லாவிதமான பகட்டான ஆடம்பரத்தையும்…மேலும் இந்த ஏராளமான நபர்கள் மேடையின் மேல் இருக்கின்றனர் பனிச்சறுக்குகளைப் பற்றி முயலுக்குத் தெரிந்ததை விட அவர்களுக்குத் தேவனைக் குறித்து அதிகம் தெரியாது, இந்த ஸ்திரீகள் தங்களுடைய தோல் வெளியில் தெரியும்படிக்கு மிகவும் இறுக்கமான ஆடைகளை அணிந்து, மேடையில் மேலும் கீழுமாக நடந்து, தங்களுடைய கரங்களைத் தட்டிக் கொண்டும், அந்தவிதமாகக் குதித்துக்கொண்டும், ஒரு கூட்ட நிகழ்ச்சியைப் போலவோ அல்லது மற்ற ஏதோ ஒன்றைப் போலவோ செய்கிறார்கள். 128 “தேவனே, எங்களை பரிசுத்த ஆவிக்கும், வல்லமைக்கும், வார்த்தையின் வெளிப்படுத்துதலுக்கும் திரும்பக் கொண்டு வாரும்! இன்னும் ஒரு விசை, கர்த்தாவே, இன்னும் ஒரு விசை!” நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] “தேவனாகிய கர்த்தாவே, இன்னும் ஒரு விசை, இன்னும் ஒரு விசை இயேசு கிறிஸ்துவின் பிரசன்னம் சபையினூடாக நடந்து வருவதை நான் காணட்டும், அவருடைய வல்லமையும் அவருடைய வாக்குத்தத்தமும் எங்களுக்கு முன்பாக வெளிப்படுவதை நான் காணட்டும். இன்னும் ஒரு விசை, கர்த்தாவே, இன்னும் ஒரு விசை! தேவனே, இரக்கமாயிரும், எங்களுக்கு உதவி செய்யும்!” 129 இந்த மற்ற காரியங்கள் நமக்கு என்ன தருகின்றன என்று நீங்கள் பார்க்கிறீர்களா? அது மிகவும் கொல்லும்…அது கிறிஸ்துவின் இயல்பைச் சபையிலிருந்து விரட்டுகிறது, சபைக்கு வெளியே—வெளியே, ஜனங்களிடத்திலிருந்து விலகிச் செல்ல வைக்கிறது. இந்த வார்த்தையிலிருந்தும், ஒருவருக்கொருவர் நம்முடைய அன்பிலிருந்தும் நம்மைப் பிரிக்காதபடிக்கு நாம் ஒன்று சேர்ந்து பிணைக்கப்பட்டிருக்க வேண்டும். 130 இயேசு கிறிஸ்து இங்கே இருக்கிறார், அவரே நம்முடைய பிதா, அவரே நம்முடைய தாய், அவரே என்னுடைய சுகமளிப்பவர், அவரே என்னுடைய ராஜா, அவரே என் தேவன், அவரே என் ஜீவன், அவரே என்னுடைய சந்தோஷம், அவரே என்னுடைய சமாதானம், இருப்பதெல்லாம், அவரே எனக்கானவர், அவரே என்னுடைய எல்லாவற்றிலும் எல்லாமுமாக இருக்கிறார். அவர் இப்பொழுது இங்கே இருக்கிறார். 131 அவர் சபையை அந்த இடத்திற்கு திரும்பக் கொண்டுவர விரும்புகிறார். “இன்னும் ஒரு விசை, கர்த்தாவே” என்று எங்களால் கதறி, எங்களுடைய குருடாக்கப்பட்ட விழிப்பள்ளங்களிலிருந்து மனந்திரும்புதலின் கண்ணீரை விட முடியுமா என்று எதிர்நோக்குகிறோமா? நான் இந்தச் சபையோடு சரியாகப் பேசிக் கொண்டிருக்கவில்லை. இது ஒலிப்பதிவு செய்யப்படுகிறது, நீங்கள் பாருங்கள், இங்கே, இது உலகம் முழுவதும் செல்லும். நம்முடைய—நம்முடைய ஜனங்கள் மீண்டும் அந்த நிலைக்குத் திரும்பி வரட்டும், நாம் வழக்கமாக நடத்துவது போன்ற ஒரு—ஒரு கூட்டத்தை நாம் திரும்ப அழைக்கக்கூடிய ஒரு இடத்திற்கு அது திரும்ப வரட்டும். 132 அதற்குப் பத்து அல்லது பதினைந்து வருடங்கள் முன்பு எடுத்துக் கொண்டாலும், அப்பொழுதிலிருந்து அது எப்படி குறைந்து வருகிறது என்று பாருங்கள், அது எப்படி கீழே, கீழே, கீழே சென்றது என்று பாருங்கள். இது கிட்டத்தட்ட ஒரு அவமானம், தெய்வீக சுகமளித்தலைக் குறித்து பேசுவதற்கு, கிட்டத்தட்ட, ஒரு சக மனிதர் வெட்கப்படுகிறார், அதன்மேல் மிகுந்த நிந்தை கொண்டு வரப்பட்டது; பரிசுத்த ஆவியின் மேல் மிகுந்த நிந்தை கொண்டு வரப்பட்டிருக்கும்போது, அவரைக் குறித்து பேசுகின்றனர். அது உண்மை. அது தேவனுடைய தவறல்ல. அது தேவனுடைய வார்த்தையின் நியமங்களை விட்டுவிட்ட ஒரு சிம்சோனாய் உள்ளது, அதற்குப் பதிலாக வேறொன்றை கொண்டு வந்துள்ளான், ஸ்தாபனம் அவனை மொட்டையடித்து, அதற்குள் அவனைக் கவர்ந்திழுக்க அனுமதித்தான். 133 என் சகோதரனே, சகோதரியே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நான் இனிமேல் தேவனுடைய மகத்தான நியாயத்தீர்ப்பின் இந்தப் பக்கத்திலிருந்து உங்களைக் காணவில்லையென்றால், “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.” அவருடைய வார்த்தையே எனக்கு ஜீவனாயிருக்கிறது. அவர் இப்பொழுது இங்கே இருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அவர் இங்கிருக்கிறார் என்பதை நான் அறிவேன். 134 அவர் இங்கிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள, நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம், அந்த வழியிலிருந்து உங்களை அப்புறப்படுத்துவதேயாகும். பார்த்தீர்களா? நீங்கள் வழியில் இருக்கும் வரை, அப்பொழுது தேவனால் உங்களுக்காக ஒன்றையும் செய்ய முடியாது. நீங்கள் உங்களுடைய சிந்தனைகளைச் சிந்திக்கும்போது, அப்பொழுது தேவனுடைய சிந்தனைகளைச் வாய்ப்பேயில்லை. ஆனால் நீங்கள் உங்களுடைய சிந்தனைகளைச் சிந்திப்பதை விட்டுவிட்டு, அவருடைய சிந்தனைகளைச் சிந்திப்பீர்களானால் நலமாயிருக்குமே! அவர், “என்னுடைய நினைவுகள் உங்களுடைய நினைவுகள் அல்ல” என்றார். “புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ, இந்தக் காரியங்களையே சிந்தியுங்கள்.” ஏதோ ஒரு சபை அதைக் குறித்து என்ன கூறப்போகிறது என்பதல்ல, ஆனால் தேவன் அதைக் குறித்து என்னக் கூறினார் என்பதே! 135 இந்தச் சிறு பெண்மணி இங்கே படுத்துக் கொண்டு, இந்தக் கட்டிலில் அசைந்து கொண்டிருப்பது போல. அந்த ஸ்திரீ தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அந்தவிதமாகவே கிடக்கப் போகிறாள், அவளுடைய—அவளுடைய விசுவாசத்தை சரியாக இயேசு கிறிஸ்து மேல் வைத்தாலொழிய. என்ன வந்தாலும் அல்லது போனாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அது அவளுக்கு வெளிப்படுத்தப்பட்டால், அப்பொழுது சுகமளித்தலைத் எதுவும் தடுத்து நிறுத்தப்போவதில்லை. அது உண்மை. ஆனால் நீங்கள் உங்களுடைய…நீங்கள் எதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. 136 நீங்கள் விசுவாசித்து விசுவாசமுடையவர்களாயிருந்தால், தேவனால் உங்களுக்காக எதையும் செய்ய முடியும். இன்றிரவு அவர் உங்களுக்காகச் செய்யக்கூடிய மகத்தான காரியம், உங்களுடைய ஆத்துமாவை மீண்டும் அவருடைய பிரசன்னத்திற்குள் திரும்பக் கொண்டு வருவதுதான். இங்குள்ள ஒவ்வொரு நபருக்கும் அங்கே மீண்டும்… 137 சற்று சிந்தித்துப் பாருங்கள், பரிசுத்த ஆவியானவர் இங்குள்ள ஒவ்வொருவரையும் முழுவதுமாகத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் என்னவாகும்? இன்றிரவு என்ன சம்பவிக்கும் என்பதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், நாளை இரவு இந்த நேரத்தில் ஷ்ரீவ்போர்ட்டில் என்ன சம்பவிக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்! அவர்களுக்கு எல்லா இடங்களிலும், “ஒரு கூட்ட ஜனங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. அவர்கள் வியாதியஸ்தரை சுகப்படுத்தி, மரித்தோரை உயிரோடெழுப்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் அமெரிக்காவில் உள்ள லூசியானாவில் உள்ள ஷ்ரீவ்போர்ட்டில் எல்லாவிதமான காரியங்களையும் செய்து கொண்டிருக்கிறார்கள்” என்ற தலைப்புச் செய்திகள் இருக்கும். பரிசுத்த ஆவியானவர் முழு அதிகாரத்தையும் எடுத்துக் கொள்ள முடிந்தால், அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர் என்பதை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவார்கள். 138 அவர் ஏன் அவ்வாறு செய்யக் கூடாது? அவர் விரும்புகிறார். அவர் அதைச் செய்ய விருப்பமுள்ளவராயிருக்கிறார். அவர் காத்துக் கொண்டிருக்கிறார். “பாருங்கள்,” நீங்கள், “நான் அவரிடத்தில் அநேகக் காரியங்களைக் கேட்டிருக்கிறேன், நான் அவரிடத்தில் அதிகமாகக் கேட்க வெறுக்கிறேன்” என்று கூறலாம். உங்கள் சந்தோஷங்கள் நிறைவாகும்படிக்கு, மிகுதியாய் கேளுங்கள்! 139 பசிபிக் பெருங்கடலின் நடுவில் அரை அங்குல நீளமுள்ள ஒரு சிறிய மீன், “இந்தத் தண்ணீரை நான் சிக்கனமாகப் பருகினால் நலமாயிருக்கும், நான் என்றாவது ஒரு நாள் தீர்த்துவிடலாம்” என்று சொல்வதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? எகிப்தின் பெரிய களஞ்சியங்களில், அந்த அளவுள்ள ஒரு சிறிய எலி, சிந்தியுங்கள், “அடுத்த அறுவடை வருவதற்குள் என் தானியம் தீர்ந்து போகலாம், அதனால் நான் ஒரு நாளைக்கு ஒரு தானியம் மட்டுமே சாப்பிடுவேன் என்று கூறுவதை உங்களால் சிந்தித்துப் பார்க்க முடிகிறதா”? ஓ, என்னே! இப்பொழுது அதை நூறு பில்லியனால் வகுத்தால், உங்களுக்கான தேவனுடைய இரக்கங்களையும் கிருபையையும், வல்லமையையும் நீங்கள் எவ்வளவு சுலபமாகத் தீர்த்துவிட முடியும், நீங்கள் அதை விசுவாசித்தால், நீங்கள் உங்களை விட்டுவிடலாம்…பாருங்கள், நான் வருந்துகிறேன்…அதாவது, நீங்கள் அவரைச் சோர்வடையச் செய்ய முடியாது. 140 அவரே நித்திய ஜீவனின் வற்றாத ஊற்றாயிருக்கிறார், இங்கே இன்றிரவு அவருடைய வேதாகமத்தின் எந்தத் தெய்வீக வாக்குத்தத்தத்தையும், அதை விசுவாசிக்கிற எவருக்கும் வெளிப்படுத்துவதாக. ஆமென். ஆம், ஐயா. நீங்கள் செய்கிற ஒரே காரியம் குடிப்பதுதான். ஊற்றண்டை வந்து பருகுங்கள். நீங்கள் திருப்தியடையும் வரைக்கும் பருகுங்கள். உங்களால் அவரைக் களைப்படையச் செய்ய முடியாது. இல்லை ஐயா. அவர் முற்றிலுமாக வற்றாதவராயிருக்கிறார், நீங்கள் அப்படியே குடிக்கலாம், குடிக்கலாம், பருகலாம். நீங்கள் உங்களுடைய சுகமளித்தலை உள்ளே பருகலாம். நீங்கள் உங்களுடைய இரட்சிப்பைப் பருகலாம். அப்படியே வந்து குடிக்க வேண்டும். “தாகமாயிருக்கிறவன் வந்து பானம்பண்ணக்கடவன்.” ஆமென். அவர் இங்கிருக்கிறார் என்பதை நான்—நான்—நான்—நான் அறிவேன். நாம் அவரை அதைச் செய்ய அனுமதிப்போமானால், அவர் மிகுதியான காரியங்களைச் செய்வார் என்பதை நான் அறிவேன். 141 ஏதோ ஒன்று சம்பவித்ததை நான் கண்டேன். நான்—நான் அந்த வகையான ஆராதனைகளில் ஒன்றைத் தொடங்க விரும்பவில்லை, நீங்கள் பாருங்கள், தரிசனங்கள், ஏனென்றால் நான்—நான் வேறொன்றைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன். பாருங்கள், நீங்கள் சரீரப்பிரகாரமான சுகமளித்தலுக்காக வருவதைக் குறித்து நான் பேசிக்கொண்டிருக்கவில்லை, ஆனால்…அவர்கள் அதைச் செய்யச் சென்றவுடனே, இப்பொழுது அது அப்படியே…பாருங்கள், அப்பொழுது நான் ஓய்வெடுத்துக் கொள்ளச் சென்றவுடனே, விலகியிருந்து, உங்களுக்குத் தெரிந்த முதல் விஷயம், சிக்கிக்கொண்ட மக்கள், உங்களுக்குத் தெரியும், உள்ளே வருவதை நீங்கள் உணர்கிறீர்கள். 142 இங்கே, என்னால் உங்களுக்குக் கூற முடியும். அந்த மனிதன் அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டு, அவனுடைய மருமகனின் பையனுடன் அந்த மோசமான இடுப்புடன் இருந்தார். அவன் விசுவாசித்தால், தேவன் அவனைச் சுகப்படுத்தி, அவனைச் சுகமாக்குவார். அவர் அவனைச் சுகப்படுத்தி, அவனைச் சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? [அந்தச் சகோதரன், “ஆமென்” என்கிறார்.—ஆசி.] நீங்கள் அதைச் செய்தால், பாருங்கள் தேவன் அதைச் செய்வார். பார்த்தீர்களா? முற்றிலும் சரி. ஆமென். 143 இதோ ஒரு மனிதன் இங்கே உட்கார்ந்து கொண்டு, என்னை நோக்கிப் பார்க்கிறார். அவர் தன்னுடைய குடும்பத்திற்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார். அவர் உண்மையாகவே இங்கிருந்து வரவில்லை. அவர் தெற்கு கரோலினாவிலிருந்து வந்திருக்கிறார். திரு. டிக்ஸன். ஆனால் அவர் தன்னுடைய முழு இருதயத்தோடு விசுவாசித்தால், தேவன் அவருக்கு அந்த ஆசீர்வாதத்தை அருளுவார். ஐயா, நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நான் அவருக்கு முற்றிலும் அந்நியன். நான் என்னுடைய வாழ்க்கையில், அவரை ஒருபோதும் கண்டதேயில்லை. ஆமென். நான் என்னுடைய வாழ்க்கையில் அவரை ஒருபோதும் கண்டதேயில்லை. 144 ஆனால் நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா? அது என்ன? “சகோதரன் பிரான்ஹாம், அது எப்படி கிரியை செய்கிறது?” சகோதரன் பிரான்ஹாம் வழியை விட்டு வெளியேறும்போது! ஆம், ஐயா. நான் வழியை விட்டு வெளியேறும்போது, அப்பொழுது இயேசு கிறிஸ்து உள்ளே வருகிறார். 145 இதற்கிடையில், அவருக்கு அருகில், அக்கினி மற்றொரு மனிதனை பற்றிக் கொண்டது, அவரும் தெற்கு கரோலினாவைச் சேர்ந்தவர். அது உண்மை. அது சரியாக அவர்மேல் தொங்கிக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன். அது முற்றிலும் உண்மை. குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒரு சகோதரனுக்காக அவர் ஜெபித்துக் கொண்டிருக்கிறார். அது முற்றிலும் உண்மை. கவனியுங்கள். நீங்கள் தான் சகோதரன் ஹோம்ஸ். நீங்கள் அந்தத் தேவனை விசுவாசிக்கிறீர்களா…அது தானே உங்களுடைய பெயர்? தேவன்…தேவன் அதை உங்களுக்கு அருளுவார். நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா? “இன்னும் ஒரு விசை, கர்த்தாவே, இன்னும் ஒரு விசை!” 146 நாம் ஒவ்வொருவரும் நம்முடைய காலூன்றி எழும்பி நிற்போம். பெந்தேகோஸ்தேயினரே, உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள், “இன்னும் ஒரு விசை, கர்த்தாவே! இன்னும் ஒரு விசை, கர்த்தாவே, இன்னும் ஒரு விசை!” அல்லேலூயா! என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது இங்கே உள்ளது. நாம் ஒருமனதோடு, “இன்னும் ஒரு விசை, கர்த்தாவே!” என்று கதறுவோமாக. “இன்னும் ஒரு விசை, கர்த்தாவே! இன்னும் ஒரு விசை, கர்த்தாவே! கர்த்தாவே மீண்டும் ஒருமுறை உம்முடைய வல்லமையை அனுப்பும், உம்முடைய ஆசீர்வாதங்களை அனுப்பும். பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போலப் பரிசுத்த ஆவியை எங்கள்மேல் அனுப்பி, இங்குள்ள ஒவ்வொரு ஆத்துமாவையும் புதியதாக நிரப்பும்” என்று கதறுவோமாக. தேவனுக்கு மகிமை! அதை உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். “இன்னும் ஒரு விசை, கர்த்தாவே, இன்னும் ஒரு விசை!” அல்லேலூயா! 147 ஆவியில் வெறி கொண்டவர்களாயிற்றே! நீங்கள் மிகவும் குடித்து வெறித்து உங்களுடைய பெயர் என்ன என்பதை மறந்து போகும் வரையில் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் ஊற்றினால், நீங்கள் உங்களுடைய எல்லா சந்தேகங்களையும் மறக்கும் வரை; நீங்கள் உங்களுடைய சந்தேகங்களை மறந்துவிடுமளவிற்கு, நீங்கள் ஆவியில் குடித்திருங்கள், ஆமென், அப்பொழுது நீங்கள் தேவனோடு எங்காவது சென்றடைய முடியும். அப்பொழுது உத்தமத்திலிருந்து “இன்னும் ஒரு விசை” என்ற கூக்குரல் எழும்பி, அதன்பின்னர் வேறொன்று. அல்லேலூயா! பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, இவர்கள் ஆவியில் வெறித்துள்ளனர்; தேவனுடைய நீதியும், பரிசுத்தமும், வல்லமையும், நீங்கள் யார் என்பதை மறந்துவிடுமளவிற்கு உங்களை அதிகமாய் போதையில் வெறிகொண்டிருக்கச் செய்கிறது. நீங்கள் துவக்கத்திலேயே ஒன்றுமில்லை. தேவன் உங்களுக்குள்ளாக வர விரும்புகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். “இன்னும் ஒரு விசை, கர்த்தாவே! இன்னும் ஒரு விசை, கர்த்தாவே, இன்னும் ஒரு விசை!” 148 ஓ, பெந்தேகோஸ்தேயினரே, பெந்தேகோஸ்தேயினரே, உங்கள் ஜீவனுக்காக ஓடுங்கள்! இன்னும் சிறிது காலம் மாத்திரமே உள்ளது. நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் தாமதமாகிவிட்டது. நான் இந்தப் பிரசங்க பீடத்திலிருந்து வேறொரு வார்த்தையைக் கூறவில்லையென்றால், நினைவிருக்கட்டும், உங்கள் ஜீவனுக்காக ஓடுங்கள்! நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் தாமதமாகிவிட்டது. பரிசுத்த ஆவியானவர் என் மேல் இருப்பதை நான் உணருகிறேன், “அதை மீண்டும் கூறு” என்று கூறுகிறார். உங்கள் ஜீவனுக்காக ஓடுங்கள்! நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் தாமதமாகிவிட்டது. 149 இன்னும் ஒரு விசை, கர்த்தாவே, இன்னும் ஒரு விசை ஜீவ கூடாரத்தை நித்திய ஜீவனால் நிரப்பும், இங்கிருக்கிற ஒவ்வொரு அங்கத்தினரையுமே. கர்த்தராகிய இயேசுவே, கர்த்தருடைய மகிமை இந்தச் சபையின் மேல் விழுவதாக. அல்லேலூயா! அல்லேலூயா! நான் தேவனை விசுவாசிக்கிறேன். இன்னும் ஒரு விசை, கர்த்தாவே, இன்னும் ஒரு விசை மனிதன் அவர்கள் யார் என்பதை மறந்துவிடட்டும். மனிதன் தன்னுடைய அவிசுவாசத்தை மறந்துவிடட்டும், “இன்னும் ஒரு விசை, கர்த்தாவே, இன்னும் ஒரு விசை!” என்று நாங்கள் கதற முடியும். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] 150 ஓ தேவனே, பரலோகப் பிதாவே, கர்த்தாவே, எங்கள் ஆத்துமாக்களில் எங்களுக்கு ஒரு எழுப்புதலைத் தாரும். விளக்குகள் புகைந்து கொண்டிருப்பதையும், பீடத்தின் மேலுள்ள அக்கினி அணைந்து கொண்டிருப்பதையும் நாங்கள் காண்கிறோம். ஓ தேவனாகிய கர்த்தாவே, பாவத்தினால் சபிக்கப்பட்ட ஒரு தேசத்தை நோக்கிப் பாரும், ஆனால், கர்த்தாவே, உம்முடைய ஜனங்களை மறந்துவிடாதேயும். கர்த்தாவே, இங்குள்ள ஜனங்கள் உமக்காக இந்த சிறிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப, பல ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றனர். கர்த்தாவே, ஜீவ கூடாரம் ஒரு—ஒரு ஆத்துமா இரட்சிக்கும் நிலையத்திற்காக, ஒரு எழுப்புதலுக்காகக் கட்டப்பட்டது. ஓ தேவனே, இன்னும் ஒரு விசை அதற்குள் உம்முடைய பரிசுத்த வல்லமையை ஊற்றும். ஒவ்வொரு அங்கத்தினரையும், ஒவ்வொரு வேறுபாடுகளையும் எடுத்துப் போடும். தேவனுடைய பரிசுத்த அக்கினி மழையை அனுப்பி, கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தினால் எங்களுடைய ஆத்துமாக்களை பிரகாசமாக்கும். நீர் இங்கே எங்களோடு இருக்கிறீர் என்பதை ஜனங்கள் காணும்படியாக அவிசுவாசத்தில் தாழ்ந்து போகாதிருப்பார்களாக, நீரே வார்த்தையாயிருக்கிறீர், வேதம் மீண்டும் மீண்டும், நமக்கு நிரூபிக்கப்பட்டிருக்கிறபடி, இருதயத்தின் நினைவுகளை வகையறுக்கிறவராய் இருக்கிறீர். தேவனாகிய கர்த்தாவே, தேவனுடைய ஆவி எங்கள் மத்தியில் இருப்பதைக் குறித்து எங்கள் புலன்களுக்கு விழித்தெழுவோமாக. பிதாவே, இதை அருளும். நான் என்னோடு அதை உம்மிடத்தில் சமர்ப்பிக்கிறேன். ஆமென். 151 சகோதரனே, சகோதரியே, என்னுடைய வேதாகமத்தில், சபையின் எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு முன்னர் தேவன் வாக்குத்தத்தம் செய்துள்ள மற்றெந்த காரியத்தைக் குறித்தும் எனக்கு தெரியாது. எனக்குத் தெரியாது. நீங்கள் மிருகத்தின் முத்திரை வருவதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்; நான் உங்களிடம் கூறியுள்ளேன், அதை, அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டனர். பார்த்தீர்களா? அடுத்ததாக விடப்பட்டிருப்பது சபையின் எடுத்துக்கொள்ளப்படுதலாகும். அது எந்த நேரத்திலும் வரலாம், எனக்குத் தெரிந்தமட்டில், வேதாகமத்தில் உள்ள எந்த வேதவாக்கியத்தையும் சீர்குலைக்க முடியாது. அது உண்மை என்பதை தேவன் அறிவார். ஆம், ஐயா. காலம் சமீபித்துவிட்டது. நாம் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாகிவிட்டது. 152 நாம் நம்முடைய கண்களை அப்படியே மூடி, நான் அவரை நேசிக்கிறேன் என்று பாடுவோமாக. ஒருக்கால், நாம் அவரைத் தொழுதுகொண்டு, துதிப்போமானால், ஒருக்கால் அவர் ஏதோ ஒரு காரியத்தைச் செய்வார். இந்தக் கூடாரத்தில் ஒரு வெளிப்படுதலைக் காண நான் இந்த வாரம் முழுவதும் ஜெபித்து வந்தேன். நான் இங்கு வருவதற்கு முன்பு நான் ஜெபித்தேன். இதற்காக ஜெபிக்கும் ஜனங்களை நான் பெற்றுள்ளேன். ஓ, இதற்காக ஜெபம் நடந்து கொண்டிருக்கிறது. நான் என் முழு இருதயத்தோடு விசுவாசிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். நாம் உடனே விழித்தெழுவோமாக. நாம் நம்முடைய கண்களை மூடி, நம்முடைய கரங்களைத் தேவனிடத்தில் உயர்த்தி, இப்பொழுது பாடுகையில், நாம் அவரை ஆராதித்து, அவரைத் துதிப்போமாக. நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார் என்னுடைய இரட்சிப்பை சம்பாதித்தார் கல்வாரி மரத்தின் மேல். 153 இப்பொழுது நாம் அடுத்த சரணத்தைப் பாடும்போது, உங்களுக்கு அருகில் உள்ள யாரிடமாவது கரங்குலுக்கி, உங்களுடைய கிறிஸ்தவ சகோதரனுக்கு, இப்பொழுது நாம் அதைப் பாடுகையில், “தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக” என்று கூறுங்கள். நான் அவரை நேசிக்கிறேன், நான்… நீங்கள் ஒருவரிலொருவர் அன்பு கூர்ந்தால், நீங்கள் தேவனை நேசிப்பதை விட்டுவிட முடியாது. ஏனென்றால் அவர் முதலில்… …?… …இரட்சிப்பு கல்வாரியின் மேல்… 154 இப்பொழுது நாம், “அல்லேலூயா!” என்று கூறுவோமாக. “அல்லேலூயா!” அதை மீண்டும், “அல்லேலூயா!” என்று கூறுங்கள். மீண்டும், “அல்லேலூயா!” நம்முடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்! நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் ஏனெனில்… சகோதரன் டான், நீங்கள் ஆயத்தமா?